News
Loading...

போனஸ் கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 28ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

போனஸ் கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 28ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

தீபாவளி போனஸ் வழங்காததை கண்டித்து வரும் 28ம் தேதி இரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட  போவதாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (தமிழ்நாடு) அறிவித்துள்ளது.  தமிழக 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தில் ஓட்டுனர் (பைலட்),  கால் சென்டர் பணியாளர் உள்ளிட்ட பணிகளில் 3,800 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கும்  போனஸ் தொகை இந்த ஆண்டு வழங்கப்படவில்லை. எனவே, ஊழியர்கள் தங்களுக்கு சட்டப்படி குறைந்தது 8.33 சதவீதம் போனஸ்  தொகையாவது வழங்க வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்திடம் முறையிட்டு வருகின்றனர்.  

இது குறித்து சங்கத்தின் மாநில செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது:  108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ரூ.1 கோடியே 83 லட்சத்து 15  ஆயிரம் பணபயன்கள் நிலுவையில் உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி போனசும் வழங்கப்படவில்லை. இவை தவிர 108 ஆம்புலன்ஸ்  நிர்வாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனுக்காக தமிழக அரசு எவ்வளவு நிதி ஒதுக்குகிறது என்ற தகவலும் தெரியப்படுத்துவதில் ைல. இவையெல்லாம், குறித்து நிர்வாகத்திடம் முறையிட்டால் தெளிவான பதில் இல்லை. எனவே, வரும் 28ம் தேதி இரவு 8 மணி முதல்  29ம் தேதி இரவு 9 மணி வரை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். அதற்குள் எங்களுடன் பேச்சுவார்த்தை  நடத்தி 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தினர் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில்  ஈடுபடுவோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...