News
Loading...

கில்லி, மங்காத்தா படத்தின் 2-ம் பாகத்தை எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார்கள்.

கில்லி, மங்காத்தா படத்தின் 2-ம் பாகத்தை எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார்கள்.

மங்காத்தா-2 அதிரடி வில்லன் வேடத்தில் அஜித் நடித்து ஹிட் ஆன ‘மங்காத்தா’ படத்தின் 2-ம் பாகத்தை எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார்கள். மங்காத்தாவில் கெஸ்ட் ரோலில் அர்ஜூன் நடித்தார். 2-ம் பாகத்தில் அந்த ரோலில், இளைய தளபதி விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். அஜித்துக்கு த்ரிஷாவும், லட்சுமிராயும் ரெடி. மங்காத்தாவை தயாரித்த துரை தயாநிதிதான், மங்காத்தாவின் 2-ம் பாகத்தையும் தயாரிக்கிறார். 

கில்லி, மங்காத்தா படத்தின் 2-ம் பாகத்தை எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார்கள்.

கில்லி-2 விஜய் சினிமா கேரியரை புரட்டிப் போட்ட திரைப்படம் ‘கில்லி’. இதன் ரிலீஸுக்குப் பிறகு ராக்கெட்  வேகத்தில் எகிறியது விஜய்யின் சினிமா கிராஃப். விஜய் கால்ஷீட்டுக்காக காத்துக்கிடக்கும் ஏ.எம்.ரத்னம், ‘கில்லி -2’ தயாரிக்க உள்ளார். அதில் நடிக்க பிரகாஷ்ராஜ் ஓ.கே சொல்லிவிட்டாராம். த்ரிஷாவை மீண்டும் டிக் செய்துள்ளாராம், தரணி. 

கில்லி, மங்காத்தா படத்தின் 2-ம் பாகத்தை எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார்கள்.

இம்சை அரசன் 23-ம் புலிகேசி - 2 ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ 2-ம் பாகத்தின் கதை, திரைக்கதையைப் பக்காவாகத் தயார்செய்து வருகிறார் சிம்புதேவன். சில காட்சிகள் குறித்து டிஸ்கஷன் செய்ய சிம்புதேவன் சென்றபோது, ‘வேணாம் சாமீ. எதுலயும் நான் தலையிடல. நீ பாட்டுக்கு ஏதாவது பார்த்து செய்யி’ என்று கரம் கூப்பி அவரை வைத்தாராம், வடிவேலு. 2-ம் பாகத்தை ஷங்கரும், லைக்காவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

கில்லி, மங்காத்தா படத்தின் 2-ம் பாகத்தை எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார்கள்.

மணல் கயிறு -2 எஸ்.வி.சேகர் கதாநாயகனாக நடித்து 1982-ல் வெளிவந்த ‘மணல் கயிறு’ படத்தின் 2-ம் பாகம் வருகிறது. எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் ஹீரோவாக நடிக்கிறார். திருமணம் செய்துகொள்ள மணமகளுக்கு எட்டு கண்டிஷன்களை அஸ்வின் போட, ஒரு நிபந்தனைக்கும் ஒத்துவராத இனியா மனைவியாகிறார். பிறகென்ன... குடும்பத்தில் தினசரி அடிதடி என செல்கிறது கதை. ‘யாருடா மகேஷ்’ மதன்குமார் இயக்கி உள்ளார். அனைத்துப் பாடல்​களையும் மறைந்த நா.முத்துக்குமார் எழுதியுள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...