News
Loading...

உணவில் அதிக உப்பை பயன்படுத்துவதால் விபரீதம் : ஆண்டுக்கு 25 லட்சம் பேர் உயிரிழப்பதாக தகவல்

உணவில் அதிக உப்பை பயன்படுத்துவதால் விபரீதம் : ஆண்டுக்கு 25 லட்சம் பேர் உயிரிழப்பதாக தகவல்

உணவில் அதிக உப்பை பயன்படுத்துவதால் ஆண்டுக்கு 25 லட்சம் பேர் மரணமடைவதாக பகீர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. உப்பு இல்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழி வழக்கில் உள்ளது. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை நிரூபிக்கும் வகையில், உணவில் உப்பை அதிகளவில் பயன்படுத்தும் போது அது நமக்கே ஆபத்தாக முடிகிறது. உப்பின் பயன்பாடு குறித்து உலக சுகாதார அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் ஒருவர் நாள்தோறும் சராசரியாக தற்போது 9.2 கிராம் உப்பை பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதிலும் அதிக அளவு உப்பை பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழப்பதாகவும், லட்சக்கணக்கானோர் இதய நோயால் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. தற்போது பயன்படுத்தி வரும் உப்பி்ன் அளவை குறைத்து, ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பை பயன்படுத்தினால் ரத்த கொதிப்பு மற்றும் இதயம் தொடர்பான நோய்களில் இருந்து தப்பிக்கலாம் என ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.  

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.