News
Loading...

இந்தியாவில் ஜியோ 4ஜியின் இணையவேகம் ரொம்ப குறைவு : டிராய்

இந்தியாவில் ஜியோ 4ஜியின் இணையவேகம் ரொம்ப குறைவு : டிராய்

இந்தியாவில் ஜியோ 4ஜி சேவையின் இணைய வேகமானது மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் வழங்கும் இணைய வேகத்தைவிட மிகக் குறைவு என்று டிராய் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்ட ஆய்வில், ரிலையன்ஸ் ஜியோ சேவையின் இணையதள வேகம் இந்தியாவிலுள்ள மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களின் வேகத்தைவிட மிகக்குறைவாகவே வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருவதாக தெரிவித்துள்ளது.

இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்ட ஆய்வின் படி, இந்திய 11.4Mbps டவுன்லோட் வேகத்துடன் ஏர்டெல் இந்தியாவிலேயே முதலிடத்தையும், 7.9Mbps உடன் ரிலையன்ஸ் இரண்டாம் இடத்தையும், 6.2Mbps வேகத்துடன் ஜியோ கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.

அப்லோட் வேகத்தை பொறுத்தவரை ஐடியா நிறுவனம் 4.1Mbps உடன் முதலிடத்தையும், வோடாபோன் (4.0Mbps) மற்றும் ஏர்டெல் (3.7Mbps) முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தையும் மற்றும் ஜியோ 2.4Mbps வேகத்துடன் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளது.

மேலும் தமிழகத்தைப் பொறுத்தவரை டவுன்லோட் வேகத்தில் ஏர்டெல் 11.2Mbps உடன் முதலிடத்தையும், 9.6Mbps வேகத்துடன் BSNL இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளன. ஜியோ நிறுவனமானது 7.5Mbps வேகத்துடன் ஆறாவது இடத்தையே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அப்லோட் வேகத்தில் வோடபோன் 4.3Mbps உடன் முதலிடத்தையும், ஐடியா (4.1Mbps) இரண்டாமிடத்தையும் மற்றும் ஜியோ 2.4Mbps சராசரி வேகத்துடன் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளன.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...