News
Loading...

அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் பட்டியல்: வழக்கம்போல பில்கேட்ஸ் முதலிடம்

அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் பட்டியல்: வழக்கம்போல பில்கேட்ஸ் முதலிடம்

அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐந்து தொழிலதிபர்கள் இடம்பிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் அதிகப்படியான செல்வச் செழிப்பான 400 செல்வந்தர்களை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் வழக்கம்போல இந்தாண்டும் மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார்.60-வயதாகும் பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 81 பில்லியன் டாலர்கள் ஆகும். தொடர்ச்சியாக 23-வது தடவையாக பில்கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார்.

இந்தப் பட்டியலில் ஐந்து அமெரிக்க வாழ் இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்திய வம்சாவளியினரான சிம்போனி டெக்னாலஜி நிறுவனத்தின் நிறுவனர் ரோமேஷ் வத்வானி, சின்ட்டெல் நிறுவனத்தின் துணை நிறுவனரான பாரத் நீர்ஜா தேசாய், இண்டிகோ விமான நிறுவன அதிபரான ராகேஷ் கங்வால், தொழிலதிபர் ஜான் கபூர், சிலிகான் வேல்லி ஏஞ்சல் முதலீட்டு நிறுவனத்தின் அதிபரான கவிதார்க் ராம் ஸ்ரீராம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...