News
Loading...

பேட்டரிகள் வெடிப்பதால் சாம்சங் கேலக்சி நோட் 7 உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்

பேட்டரிகள் வெடிப்பதால் சாம்சங் கேலக்சி நோட் 7 உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்

பேட்டரிகள் தொடர்ந்து வெடிப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் கேலக்சி நோட் 7 ரக மாடல் மொபைல் போன் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்த சாம்சங் நிறுவனம் மறுத்து விட்டது.

இது தொடர்பாக தென் கொரியாவை சேர்ந்த செய்தி நிறுவனத்திற்கு பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாக வெளியிட்ட செய்தியில், தென்கொரியா, அமெரிக்கா மற்றும் சீனாவில் உள்ள நுகர்வோர் சட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கேலக்சி நோட் 7 ரக மொபைல் போன் உற்பத்தியை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்சி நோட் 7 ரக மாடல் போன்கள் சார்ஜ் செய்யும் போது பேட்டரி வெடிப்பதாக பல புகார்கள் வந்தன. இதனையடுத்து கடந் செப்.,2ம் தேதி இந்த மாடல் போனை நிறுத்தி வைக்கவும், விற்பனையான மொபைல் போனை திரும்ப பெற்றுக்கொள்ளவும் சாம்சங் நிறுவனம் முடிவு செய்தது. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...