News
Loading...

சேமிப்பில் 710 கிலோ தங்கம்!

சேமிப்பில் 710 கிலோ தங்கம்!

*90 சதவிகித இந்தியர்களிடம் சொந்த வாகனம் இல்லாத நிலையில், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களில் பொதுப் போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை  1 சதவிகிதம்தான்.

*நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து 1 லட்சத்து 91 ஆயிரத்து 069 மைல்கள் பயணம் செய்துள்ளார். மோடியின் பயணத்திற்காகவே  ஏர் 
இந்தியா நிறுவனம் டிசம்பர் 2015 வரை 117 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. 

*பிப்ரவரி 4, 2014  அன்று பதவியேற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைமை நிர்வாகி சத்ய நாதெள்ளாவின் தந்தை பி.என்.யுகேந்தர் மற்றும் மாமனார் கே.ஆர்.வேணுகோபால் என இருவருமே ஆச்சரியகரமாக  ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பணிபுரிந்தவர்களாவர். 

*ஐதராபாத்தில் இருக்கும் 14 ஆயிரம் பிச்சைக்காரர்கள் ஒரு ஆண்டுக்கு சம்பாதிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? ஜஸ்ட் ரூ.24 கோடிதான். 

*இந்தியாவில் நிகழும் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர் இழப்பீட்டைக் கோரிப் பெற தேவைப்படுவது 600 நாட்களாகும்.

*ராணி எலிசபெத்திற்கு நார்ஃபோக்கில் உள்ள 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள சாந்திரிங்கம் (Sandringham) எஸ்டேட்டை பராமரிக்க ஐரோப்பிய யூனியன் ஆண்டுதோறும் அளிக்கும் மானியத் தொகை ரூ.6 கோடி  ஆகும்.

*இந்தியாவில் 2001ம் ஆண்டிலிருந்து பார்சி இனத்தவரின் மக்கள் தொகை 22 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. தற்போது வாழ்ந்து வரும் பார்சி இனத்தவரின் எண்ணிக்கை 57 ஆயிரத்து 264 ஆகும்.

*உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஆக்ராவில் துளசி  பணப்பயிராக வெற்றிகரமாக பயிரிடப்படுகிறது. இத்துளசியில் ராமா, சியாமா என இரு வகைகள் இருந்தாலும் பெரும்பாலும் மக்களால் பயிரிடப்படுவது  ராமா வகை துளசியாகும்.

*மேற்கு இந்தியத் தீவுகளின் கிரிக்கெட் வீரர் ஆன்டி காண்டீம் (Andy Ganteaume  (1921-2016) தனது அணிக்காக 1948ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் எடுத்த சராசரி ரன்கள் 112. இது ஆஸ்திரேலிய வீரர் சர் டான் பிராட்மனின் சராசரியான 99.94-ஐ விட அதிகம். ஆனால் மேற்கிந்திய வீரர் விளையாடியது ஒரே ஒரு டெஸ்ட் பந்தயம்தான்.

*உலகிலேயே மிகக் குள்ளமான ஆண்கள் கிழக்கு டிமெர் நாட்டினர். இவர்களின் சராசரி உயரம், 160 செ.மீ. உலகிலேயே அதிக உயரமானவர்கள், நெதர்லாந்து நாட்டு ஆண்கள். சராசரி உயரம் 183 செ.மீ. ஆக உள்ளது. 

*20ம் நூற்றாண்டு அமெரிக்க ஜனாதிபதி ஒருவரின் பெயரிலும் பிரிட்டனின் பிரதமர் ஒருவரின் பெயரிலும் உள்ள பொதுவான ஒற்றுமை ‘வில்சன்’ என்ற பெயராகும்.  1913-21ல் 28வது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த உட்ரோ வில்சன், 1964-70 மற்றும் 1974-76இல் பிரிட்டன் பிரதமராக இருந்த ஹரால்ட் வில்சன் ஆகிய இருவரும்தான் அந்தப் பெயர் ஒற்றுமை உள்ள தலைவர்களாவர்.

*Yew என்பது நச்சுத்தன்மையுடைய இலைகளைக் கொண்ட வலிமையும் உறுதியும்கொண்ட தச்சு வேலைக்குரிய ஒரு மரமாகும். இதில் உள்ள 
பகுதிப் பொருட்கள் புற்றுநோயைக் குணப்படுத்தக்கூடியது என அண்மைய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

*இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்  அனைவரின் சேமிப்பிலும், கட்டிகளாகவும் நாணயங்களாகவும் நகைகளாகவும் 710 கிலோ தங்கம் உள்ளது.    

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.