News
Loading...

தீபாவளி கொண்டாட்டத்தின் போது தமிழகம் முழுவதும் 762 இடங்களில் தீ விபத்து

தீபாவளி கொண்டாட்டத்தின் போது தமிழகம் முழுவதும் 762 இடங்களில் தீ விபத்து

தீபாவளி கொண்டாட்டங்களின் போது மாநிலம் முழுவதும் பட்டாசுகளால் 762 இடங்களில் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு நடந்த விபத்துகளின் எண்ணிக்கையை விட பலமடங்கு அதிகமாகும். கடந்த ஆண்டு தீபாவளியின் போது 84 இடங்களில் மட்டுமே தீ விபத்து ஏற்பட்டிருந்தது. இதற்கு அப்போது பெய்த பருவமழை காரணமாக இருந்தது. பட்டாசு வெடித்த விபத்தில் சேலம் செவ்வாய்பேட்டையில் புகழேந்தி என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக்  குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி பற்றி எரிந்தது. இதனால் அருகிலிருந்த குடியிருப்புவாசிகள் கடும் பீதியடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் 8 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் பட்டாசு வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் கன்னடபாளையம் பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்ற கூலித் தொழிலாளியின் குடிசை தீயில் எரிந்து நாசமானது. இதில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 சவரன் நகை, சான்றிதழ்கள் உடபட ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமாகின. 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பட்டாசு வெடித்து சிதறிய தீப்பொறியால் விசைத்தறி மற்றும் சாயப்பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான நூல்கள் மற்றும் ஜவுளிகள் கருகின. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பட்டாசு வெடித்ததில் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு தீப்பற்றியது. இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கரையாகின. 

நேற்று சென்னையில் மட்டும் 123 இடங்களில் பட்டாசுகளால் தீ விபத்து நிகழந்துள்ளது. நேற்று மாநிலம் முழுவதும் நிகழ்ந்த 762 பட்டாசு விபத்துகளில் 379 தீ விபத்துகள் ராக்கெட் வெடிகளால் நிகழ்ந்துள்ளது. 267 விபத்துகள் மற்ற பட்டாசுகளால் நிகழ்ந்துள்ளது. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.