News
Loading...

பினாமி பெயரில் சொத்து வாங்கினால் 7 ஆண்டு சிறை தண்டனை

பினாமி பெயரில் சொத்து வாங்கினால் 7 ஆண்டு சிறை தண்டனை

பினாமி பெயரில் சொத்து வாங்கினால் 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வழிவகை செய்யும் பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் நவ.,1ம் தேதி முதல் அமலாகிறது.

7 ஆண்டு சிறை:

கறுப்புப் பண புழக்கத்தை தடுக்கும் வகையில், 1988ல், கொண்டு வரப்பட்டுள்ள பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்து, புதிய மசோதாவை பார்லியில் கடந்த ஆகஸ்டு மாதம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம், நவ.,1 முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, பினாமி பெயரில் சொத்து பரிவர்த்தனையில் ஈடுபட்டால் அபராதத்துடன் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். 

பினாமி சொத்துகளை இழப்பீடு எதுவும் அளிக்காமல் பறிமுதல் செய்யவும் அரசுக்கு அதிகாரம் உண்டு. பழைய சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம், மூன்றாண்டு சிறை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். 

கடும் நடவடிக்கை:

கருப்பு பண நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கொண்டு வரப்படும் இச்சட்டத்தில், மத அமைப்புகள் பெயரிலும், கடவுளின் பெயரிலும் உள்ள நேர்மையான சொத்துகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த சட்டப் பிரிவை பயன்படுத்தி, மோசடி செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.