News
Loading...

பேஸ்புக் கேள்வி பதில்

பேஸ்புக் கேள்வி பதில்

கேள்வி: எனக்கு ஆறு ஆண்டுகளாக பேஸ்புக் அக்கவுண்ட் உள்ளது. அதனால், சென்ற ஆண்டில் இதே நாளில் என நான் முன்பு ஏற்படுத்திய பதிவுகள் காட்டப்படுகின்றன. இவை நாம் ஷேர் செய்தால் ஒழிய, பிறர் பார்ப்பதில்லை. ஆனால், நாம் மீண்டும் எண்ணிப் பார்க்க விரும்பாத பதிவுகள் காட்டப்படுகையில், “இவை வேண்டுமா?” என்ற எண்ணம் ஏற்படுகிறது? எனக்கு இது காட்டப்பட வேண்டாம் என்று பேஸ்புக் நிறுவனத்திற்குத் தெரிவிக்க முடியுமா? அதற்கான வழிகள் என்ன?
கா. நிர்மலா, கோவை.

பதில்: நீங்கள் குறிப்பிடும் உணர்வுடன் பலர் இருக்கின்றனர். நாம் இது குறித்து பேஸ்புக் நிறுவனத்திற்கு எழுத வேண்டாம். நம் பக்கத்திலேயே இதனை அமைக்கலாம். குறைந்தது ஓராண்டு காலத்திற்கு வேண்டாம் என செட் செய்திடலாம். அந்த வழிமுறைகளை இங்கு தருகிறேன்.

இது போன்ற பழைய நிகழ்வுகளின் பதிவுகள் தரப்பட்டால், அதன் வலது மூலைக்குச் சென்று, அம்புக்குறி மீது கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் “Hide post” என்பதில் கிளிக் செய்திடலாம். உடனே பேஸ்புக் தான் வருத்தப்படுவதனைத் தெரிவிக்கும். அதன் பின்னர், உடனே, “On This Day Preferences”. என்ற பிரிவைப் பெற ஒரு லிங்க் தரப்படும். 

இங்கு தரப்படும் விருப்ப தேர்வுகளில், நீங்கள் யாருக்கெல்லாம் இந்த நிகழ்வு நினைவூட்டல் வேண்டாம் என விருப்பப் படுகிறீர்கள் என்பதனைத் தெரிவிக்கலாம். அல்லது, குறிப்பிட்ட இரு தேதிகளுக்கிடையே நடந்த நிகழ்வுகளைக் காட்ட வேண்டாம் என அமைக்கலாம். தேதிகளுக்கு அருகே இருக்கும் “edit” என்னும் லிங்க்கில் கிளிக் செய்து இதனை மேற்கொள்ளலாம். கிளிக் செய்தவுடன் “Select Dates” என்ற ஆப்ஷன் கிடைக்கும். தொடக்க நாள், முடிக்கும் நாள் என இரண்டையும் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். இதில் எதிர்கால தேதியையும் (எ.கா. 2003 முதல் 2017 வரை) தரலாம். தேர்ந்தெடுத்த பின்னர், “Done” என்பதைக் கிளிக் செய்திட வேண்டும். இவ்வாறு தேர்ந்தெடுத்ததனை நீக்க வேண்டும் எனில், அதன் அருகே தரப்பட்டிருக்கும் சிறிய “X” அடையாளத்தில் கிளிக் செய்திட வேண்டும். அனைத்தையும் முடித்த பின்னர், On This Day preferences பிரிவை விட்டு செல்ல, “Done” என்பதில் கிளிக் செய்து வெளியேற வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.