News
Loading...

டெல்லியில் ரூ.9 கோடி சீன பட்டாசுகள் பறிமுதல் 2 பேர் கைது

டெல்லியில் ரூ.9 கோடி சீன பட்டாசுகள் பறிமுதல் 2 பேர் கைது

டெல்லியில் கன்டெய்னர் மூலமாக சீன பட்டாசுகள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து துக்ளகாபாத் பகுதியில் உள்ள கன்டெய்னர் கிடங்கில் நேற்று முன்தினம் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 6 பெரிய கன்டெய்னர்களின் மேல் பகுதியில் ஊனமுற்றவர்களுக்கான மருத்துவ உபகரணங்கள், சைக்கிள் உதிரி பாகங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அதனை திறந்து சோதனையிட்டனர்.

மேல் பகுதியில் மருத்துவ உபகரணங்களும், சைக்கிள் உதிரி பாகங்களும் இருந்தன. கீழ் பகுதியில் சீனாவில் தயாரிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து ரூ.9 கோடி மதிப்புள்ள அந்த பட்டாசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அதை இறக்குமதி செய்த பஞ்சாப் தொழில் அதிபர் மற்றும் சுங்க தரகர் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இந்த ஆண்டில் இதுவரை ரூ.11 கோடி மதிப்புள்ள சீன பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...