News
Loading...

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா மீண்டும் நம்பர்-1

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா மீண்டும் நம்பர்-1

கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 178 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது போட்டி 8-ம் தேதி தொடங்கிறது.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதையடுத்து இந்திய அணி, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை உறுதி செய்தது. இதன்மூலம் இந்திய அணி நான்காவது முறையாக நம்பர்-1 இடத்திற்கு வந்துள்ளது. முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் 3-0 என கைப்பற்றினாலும் இந்தியாவின் முதலிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஒருவேளை, நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ஆறுதல் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் முதலிடத்திற்கு வர வாய்ப்பு உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...