News
Loading...

கேரளாவை வறட்சி மாநிலமாக அறிவித்து, மத்திய அரசிடம் நிதி கேட்க முடிவு

கேரளாவை வறட்சி மாநிலமாக அறிவித்து, மத்திய அரசிடம் நிதி கேட்க முடிவு

கேரளாவை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலம் என்று அறிவித்து உள்ள அம்மாநில அரசு மத்திய அரசிடம் நிதி கேட்க முடிவு செய்து உள்ளது.

கேரள சட்டசபையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பேசுகையில், மாநில முழுவதும் வறட்சி நிலவுகிறது. பருவமழை குறைவாக பெய்துள்ளதால் பிரதமர் நரேந்திர மோடியை, முதல்–மந்திரி பினராயி விஜயன் சந்தித்து நிதி கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

இதற்கு பதில் அளித்து மாநில வருவாய் துறை மந்திரி சந்திரசேகரன் பேசியதாவது:– தென் மேற்கு பருவமழை 34 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. வட கிழக்கு பருவமழையும் கைகொடுக்கவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் வறட்சி நிலவுகிறது. இது தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுடன், முதல்–மந்திரி அவசர ஆலோசனை நடத்தினார். தண்ணீர் பயன்பாட்டை குறைக்கவும், கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

 மழை இல்லாதால் விவசாயிகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு உள்ளதால், விவசாய கடனை செலுத்த காலக்கெடு நீடிக்கப்பட்டு உள்ளது. 

எனவே கேரளா, வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படுகிறது. இது தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் அளித்து கூடுதல் நிதி கேட்கப்படும் என்றார்.

மாவட்டங்களில் நிலவு நிலையை கண்டறிய முதல்-மந்திரி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மாவட்ட கலெக்டர்களிடம் ஆலோசனை நடத்துவார். வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்படும் பணிகளை மாநில தலைமை செயலாளரும் ஆய்வுசெய்வார் என்றும் சந்திரசேகரன் அறிவித்து உள்ளார். 

English Summary : Kerala declared drought hit Govt to approach Centre for aid

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...