News
Loading...

நீச்சல் உடையில் நடிக்க தயார்: லட்சுமிமேனனின் அதிரடி முடிவு

நீச்சல் உடையில் நடிக்க தயார்: லட்சுமிமேனனின் அதிரடி முடிவு

தமிழ் சினிமாவில் அறிமுகமான படம் முதல் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் வரை எந்தவித கவர்ச்சிக்கும் இடம் கொடுக்காதவர் லட்சுமி மேனன். வாய்ப்பு இழந்த நடிகைகள் வாய்ப்புகளை பெறுவதற்காக கவர்ச்சியில் களமிறங்கும் கோலிவுட்டில், முன்னணி நடிகையாக இருக்கும்போதே கவர்ச்சி காட்டி நடிக்க தயாராக இருப்பதாக லட்சுமி மேனன் தெரிவித்துள்ளது கோலிவுட்டை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

லட்சுமிமேனன் நடிப்பில் வருகிற 7-ந் தேதி வெளியாகவிருக்கும் படம் ‘றெக்க’. விஜய் சேதுபதியுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் லட்சுமிமேனன் இப்படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார். அப்படியிருக்கும்போது, சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறும்போது, நீச்சல் உடையில் நடிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது, நீச்சல் உடையில் கிளாமராக நடிப்பது எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. நான் நீச்சல் கற்றுக்கொண்டபோது ஸ்விம் சூட் அணிந்துள்ளேன். அப்படியிருக்கும்போது படங்களில் நீச்சல் உடையில் வருவதற்கு எனக்கு தந்த தயக்கமும் இல்லை. எனவே, கதைக்கு தேவைப்பட்டால் நீச்சல் உடை அணிந்து நடிக்கவும் நான் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

லட்சுமிமேனனின் இந்த அதிரடி மாற்றத்தால் ரசிகர்கள் மட்டுமல்லாமல், கோலிவுட் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...