News
Loading...

அஜித்திற்கும், ஷாலினிக்கும் எப்படி காதல் உண்டானது தெரியுமா?

அஜித்திற்கும், ஷாலினிக்கும் எப்படி காதல் உண்டானது தெரியுமா?

அஜித் – ஷாலினி கோலிவுட்டின் அன்பான தம்பதிகளாய் வலம் வருகின்றனர். அன்பிற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள்.

குடும்பத்தின் மீது அதிக ஆசையும் அளவுகடந்த பாசத்தையும் வைத்திருக்கும் அஜித், மனைவி ஷாலினியை ஆசை ஆசையாய், காதலித்து திருமணம் செய்துகொண்டாராம்.

சரண் இயக்கத்தில் வந்த அமர்க்களம் படத்தின் மூலம் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் ஒன்றாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இப்படத்தில் ஒரு காட்சியில் ஷாலியின் கையை அஜித் கத்தியால் கிழித்துவிடுவார்.

இதன் காரணமாக தன்னால் தான் ஷாலினிக்கு இப்படி நடந்துவிட்டது என்று அஜித் பதற்றப்பட, ஆனால், ஷாலினி எதுவும் நடக்காதது போல் நிதானமாக இருந்துள்ளார். ஷாலினியின் இந்த நிதானம் அஜித்திற்கு பிடித்துப்போக, அவரது இதயத்திற்குள் அப்போதே வந்துவிட்டாராம்.

இப்படத்தின் போது இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர். அதன் பிறகு தனக்கான பெண் இவள் தான் என்று அறிந்த அஜித், நேராக ஷாலினியிடம் சென்று உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதே ஆசையில் ஷாலினியும் இருந்ததால் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார். அதுமட்டுமல்லாமல், ஷாலினி கிறிஸ்தவர், அஜித் பிராமின். இது இவர்களது காதலுக்கு தடையாகவே இருந்ததில்லை. இவர்கள் யாரும் மற்றவர்களுக்காக மதம் மாறவில்லையாம். மதம் என்பது உள்ளத்தில் நல்ல எண்ணங்கல் வளர்வதற்காக தானே தவிர காதலுக்கு தடையாய் இருப்பதற்கு அல்ல. கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் தங்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்துகொண்டாலே இல்லறம் இனிக்கும் என்று அஜித் கூறியுள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...