News
Loading...

தனுஷ் எங்களுக்கு பிறந்தவர்! புதிய பெற்றோர் அதிரடி புகார்!

தனுஷ் எங்களுக்கு பிறந்தவர்! புதிய பெற்றோர் அதிரடி புகார்!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் தனுஷ். நடிகரைத் தொடர்ந்து இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகம் கொண்டவராக திகழ்ந்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகனான இவரை சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வசித்து வரும் கதிரேசன் – மீனாள் தம்பதியினர் தங்களது மகன் என்று புதிய சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். இது தொடர்பாக போலீசிலும், முதல் அமைச்சரின் கீழ் செயல்படும் தனிப்பிரிவு அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மீனாள் கூறியதாவது: கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு முன் கலையரசன் என்ற பெயர் கொண்ட என் மகன் எங்களை பிரிந்து சென்னைக்கு சென்றான். படிக்கும் போது சில பாடங்களில் தோல்வியடைந்த பயத்தில் எங்களை விட்டு பிரிந்து சென்றான். இப்போது தனுஷ் என்ற பெயரில் ஒரு நடிகராகவும் இருக்கிறார். அவரை காண சென்றால் இப்போது அப்பாவாக இருக்கும் கஸ்தூரிராஜா குடும்பத்தினர் தடுத்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

ஆனால், இது தொடர்பாக தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினி, கஸ்தூரி ராஜா ஆகியோரது தரப்பில் எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.