News
Loading...

விரைவில் அனுஷ்காவுக்கு டும் டும் டும்!

விரைவில் அனுஷ்காவுக்கு டும் டும் டும்!

ஆறடி உயர பளிங்குச்சிலையாக ரசிகர்களை கிறங்கடித்துவரும் நடிகை அனுஷ்காவுக்கு, விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது 34 வயதாகும் அனுஷ்கா யோகா மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை பின்பற்றி, 18 வயது பெண்ணாக, இளமை, பளபளப்புடன் காட்சியளிக்கிறார். இந்நிலையில், அவருக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியில், பெற்றோர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பல மாப்பிளைகளை பார்த்து, இறுதியாக ஒருவரை தேர்வு செய்துள்ளதாகவும், இதுபற்றி அனுஷ்காவிடம் அவரது பெற்றோர் சம்மதம் கேட்டுள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. இதன்காரணமாக, சூர்யா உடன் 'எஸ் 3', பிரபாஷ் உடன் 'பாகுபலி 2' உள்ளிட்ட 4 படங்களில் மட்டுமே நடித்துவரும் அனுஷ்கா, புதிய பட வாய்ப்புகளுக்கு மறுப்பு சொல்லியுள்ளார்.

'பாகுபலி 2' வெளியானதும் அனுஷ்காவின் திருமணம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், தெரிவிக்கப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...