News
Loading...

கைது மூலம் ஊர் வாயை அடைக்க முடியுமா?: நீதிபதி கேள்வி

கைது மூலம் ஊர் வாயை அடைக்க முடியுமா?: நீதிபதி கேள்வி

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்புபவர்களை கைது செய்வதன் மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியாது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் கடந்த ஒரு மாதங்களாக உடல்நிலை பாதிப்பினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. முதலமைச்சர் குறித்து வதந்தி பரப்பியதாக இதுவரை 8பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்வதன் மூலம் இந்த வதந்தி பிரச்னைக்கு தீர்வு காணமுடியாது என தேசிய மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதி எச்.எல்.தத்து, “வதந்தி பரப்பியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளது மட்டும் மனித உரிமை மீறல் இல்லையா” என செய்தியாளர்களிடம் தத்து கேள்வி எழுப்பினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...