News
Loading...

புதுச்சேரியில் ரவுடிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய அதிரடி நடவடிக்கை!

புதுச்சேரியில் ரவுடிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய அதிரடி நடவடிக்கை!

புதுச்சேரியில் ரவுடிகளின் சொத்துகள் குறித்து கணக்கெடுக்கப்படுவதாகவும், அவை பறிமுதல் செய்யப்படும் எனவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கும் திட்டத்தை முதல்வர் நாராயணசாமி இன்று தொடங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் காவல்துறை சுதந்திரமாக செயல்படுவதாகவும், புதுச்சேரியில் ரவுடிசம் குறைந்து வருகிறது என்றும் குறிப்பிட்டார். 

புதுச்சேரியில் உள்ள ரவுடிகளின் சொத்துக்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும், விரைவில் அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...