News
Loading...

வெள்ளை மாளிகையில் தீபாவளியை கொண்டாடிய அமெரிக்க அதிபர்..!

வெள்ளை மாளிகையில் தீபாவளியை கொண்டாடிய அமெரிக்க அதிபர்..!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்க வாழ் இந்திய அதிகாரிகள் உடன் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

உலகெங்கிலும் தீபாவளி கொண்டாட்டம் கலைகட்டிவருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் திருவிளக்கு ஏற்றி வைத்து தீபாவளியை கொண்டாடினார். 2009-ஆம் ஆண்டு முதல் இக்கொண்டாட்டத்தை நடத்தி வருவதாக வெள்ளை மாளிகையின் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தீபாவளி பண்டிகையை கொண்டாடிய முதல் அதிபர் ஒபாமா ஆவார்.

இதுகுறித்து ஒபாமா கூறுகையில், அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தீபாவளி பண்டிகையை கொண்டாடிய முதல் அதிபர் என்பதில் நான் மிகவும் பெருமை படுகிறேன். நம் வாழ்க்கையில் இருளை அகற்றி வெளிச்சத்தை கொண்டு வருவதை இந்த தீபாவளி பண்டிகை குறிக்கிறது. அதன்படி தீயதை ஒழித்து அறியாமையை அகற்றி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் இதுவே இந்த பண்டிகையின் நோக்கம் ஆகும்.

இவரது இந்த தீபாவளி கொண்டாட்டத்திற்கு இதுவரை பேஸ்புக் பக்கத்தில் 1.5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். 33 ஆயிரம் பேர் பகிர்ந்துள்ளனர்.

English Summary : Barack Obama celebrates diwali lights first ever diya in oval office

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.