News
Loading...

தண்ணீரில் மிதக்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்: பெங்களூரு நபர் சாதனை

தண்ணீரில் மிதக்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்: பெங்களூரு நபர் சாதனை

பெங்களூரை சேர்ந்த இளைஞர் பெரும் முயற்சியின் விளைவாக, தண்ணீரில் மிதக்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட்போனை வடிவமைத்து, சாதனை படைத்துள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த பிராஷாந்த் ராஜ் உர்ஸ் என்பவர்தான் இந்த சாதனைக்குச் சொந்தக்கார். இளம் தொழில்முனைவரான இவர், அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு 'கோமெட் கோர்' என்ற கம்பெனியின் நிதி உதவியை பயன்படுத்தி, தண்ணீரில் மிதக்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போனை உருவாக்கி இருக்கிறார்.

இந்த ஸ்மார்ட்போன் இன்னும் சந்தைக்கு வரவில்லை என்றாலும், இதனை இப்போதே தனியாக முன்பதிவு செய்துகொள்ளலாம். இதன் ஆரம்ப விலை ரூ. 16,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4.7 இன்ச் தொடுதிரை, 16 மெகா பிக்சல் பின்புற கேமிரா, 4ஜிபி ரேம், 2ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டா கோர் புராஸசர் போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த போனுக்கு, இண்டிகோகோ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனை முழு வர்த்தக பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் வகையில், நிதி திரட்டும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக, பிரஷாந்த் ராஜ் உர்ஸ் தெரிவித்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...