News
Loading...

மிதுன ராசி நேயர்களுக்கான அக்டோபர் மாத ராசிபலன்

மிதுன ராசி நேயர்களுக்கான அக்டோபர் மாத ராசிபலன்

1-10-2016 முதல் 31-10-2016 வரை

கணித்தவர் : நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

மிதுனம்: (மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் வரை)

பொது: சுக்கிரன், சனி, ராகு ஆகியோரது நிலை அனுகூலமாக உள்ளது. 3-ஆம் தேதி முதல் புதன் 4-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். 13-ஆம் தேதி முதல் சுக்கிரன் 6-ஆமிடம் மாறுவது குறை. 17-ஆம் தேதி முதல் சூரியன் 5-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 21-ஆம் தேதி முதல் புதன் 5-ஆமிடம் மாறினாலும் ஓரளவு நலம் புரிவார். சூரியன், செவ்வாய், கேது ஆகிய கிரகங்களுக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது.

ஆரோக்கியம், குடும்பம்: முதுகு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். வாழ்க்கைத்துணைவரால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். மக்களால் செலவுகள் ஏற்படும். தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.

பொருளாதார நிலை: ஓரளவு வளர்ச்சி பெறும். 12-ஆம் தேதிக்குள் ஓர் அதிர்ஷ்ட வாய்ப்புக் கூடிவரும்.

நிலபுலங்கள்: அளவோடு லாபம் தரும். சொத்துக்கள் வாங்க அரசு மற்றும் வங்கி உதவி கிடைக்கும்.

தொழில்: அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் விருத்தி அடையும். 3-ஆம் தேதி முதல் வியாபாரிகளுக்கு வெளிச்சமான சூழ்நிலை உருவாகும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். 12-ஆம் தேதி வரை கலைஞர்களுக்கு வெற்றிகள் குவியும். அதன்பிறகு சோதனைகள் சூழும். தொழிலாளர்களுக்குத் திறமைக்குரிய பயன் கிடைக்கும்.

மாதர்களுக்கு: மாத முன்பகுதியில் முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். பின்பகுதியில் பிரச்னைகள் அதிகரிக்கும். 

மாணவர்களுக்கு: 3-ஆம் தேதி முதல் வெற்றி வாய்ப்புக்கள் கூடும்.

சந்திராஷ்டமம்: அக்டோபர் 10, 11, 12 (காலை).

அதிர்ஷ்ட தேதிகள்: 2, 3, 5, 6(முற்பகல்), 16, 19, 28, 30

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.