News
Loading...

விருச்சிக ராசி நேயர்களுக்கான அக்டோபர் மாத ராசிபலன்

விருச்சிக ராசி நேயர்களுக்கான அக்டோபர் மாத ராசிபலன்

1-10-2016 முதல் 31-10-2016 வரை

கணித்தவர் : நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

விருச்சிகம்: (விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை வரை)

பொது: சூரியன், புதன், குரு, சுக்கிரன், ராகு ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். 3-ஆம் தேதி முதல் புதன் 11-ஆமிடம் மாறுவது விசேடமாகும். 13-ஆம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு மாறுவது நல்லது. 17-ஆம் தேதிமுதல் சூரியன் 12-ஆமிடம் மாறுவது குறை. 21-ஆம் தேதி முதல் புதன் 12-ஆமிடம் மாறுவதும் குறையே ஆகும். ஜன்மச் சனிக்கும் 4-ல் உலவும் கேதுவுக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.

ஆரோக்கியம், குடும்பம்: கண், முகம், வாய், பல் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் நலனில் அதிக கவனம் தேவை. குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு குரு பலத்தால் விலகும். மக்களால் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவரால் அளவோடு நலம் ஏற்படும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். மாத முன்பகுதியில் தந்தையால் அனுகூலம் உண்டாகும்.

பொருளாதார நிலை: பண வரவு அதிகமாகும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். புதிய பொருட்கள் சேரும்.

நிலபுலங்கள்: சொத்துக்களால் வருவாய் கிடைக்கும் என்றாலும் சொத்துக்கள் வாங்கும்போது சட்ட சிக்கல் எதுவும் வராமல் பார்த்துக் கொள்ளவும்.

தொழில்: மாத முன்பகுதியில் தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியைக் காணலாம். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். அரசாங்கப்பணியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். வெளிநாட்டுத் தொடர்பு ஆக்கம் தரும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு சம்பந்தப்பட்ட இனங்களைச் சேர்ந்தவர்கள் 20-ஆம் தேதி வரை விசேடமான நன்மைகளைப் பெறுவார்கள். மாதப் பின்பகுதியில் தொழில் ரீதியான பிரச்னைகள் தலைதூக்கும். கவனம் தேவை.

மாதர்களுக்கு: அனுகூலமான மாதமிது. எண்ணங்கள் ஈடேறும்.

மாணவர்களுக்கு: செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். நினைவாற்றல் கூடும். ஆசிரியரின் நல்லெண்ணத்துக்கு ஆளாவீர்கள்.

சந்திராஷ்டமம்: அக்டோபர் 20, 21, 22. 

அதிர்ஷ்ட தேதிகள்: அக்டோபர் 2, 3, 5, 6 (முற்பகல்),11, 16, 19, 28, 30

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.