News
Loading...

வார ராசிபலன் - மேஷம்

வார ராசிபலன் - மேஷம்

14.10.2016 முதல் 20.10.2016 வரை

சுறுசுறுப்பாக காரியங்களைச் செய்யும் மேஷ ராசி அன்பர்களே!

தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் ஒதுங்கியிருப்பது பிரச்சினைகளைத் தவிர்க்கும்.

உத்தியோகம்:   உத்தியோகஸ்தர்கள் பொறுப்புகளில் கவனமாக இருந்தாலும் சிறுசிறு பிரச்சினைகளைச் சந்திக்க நேரலாம்.

தொழில்:  சொந்தத் தொழில் செய்பவர்கள், பணியாளர்களிடம் சுமுகமாக நடந்து கொண்டால்தான் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய இயலும். பண விஷயத்தில் முன்யோசனையுடன் செயல்படுங்கள். கூட்டுத்தொழிலில் வியாபாரம் நன்றாக நடந்தாலும் அலைச்சல் உண்டாகக்கூடும். பங்குச்சந்தை வியாபாரத்தில் கவனமாக இருந்து லாபம் பெறுவீர்கள்.

கலை :  கலைஞர்களுக்கு, புதிய ஒப்பந்தங்கள் கிடைத்தாலும், போதிய வருமானம் இருக்காது. நீண்டதூரம் பயணம் ஆரோக்கிய தொல்லையை தரலாம்.

குடும்பம் :   குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினை இருக்கலாம். பழைய கடன்கள் தொல்லை அளித்தாலும் பாதிப்பு நேராது.  

வார வழிபாடு:– வெள்ளிக்கிழமை அம்பாள் சன்னிதியில் தீபமிட்டு வழிபாடு செய்து வந்தால் சிறப்பான பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 2,6,9 
அதிர்ஷ்ட நிறம்:– சிவப்பு

அதிர்ஷ்டக்கிழமை:– செவ்வாய்

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...