News
Loading...

சினிமா கட்டணம் உயரப் போகிறது

சினிமா கட்டணம் உயரப் போகிறது

விரைவில் தமிழ்நாட்டிலுள்ள சினிமா தியேட்டர்களின் கட்டணத்தை உயர்த்துவதற்கான வாசலை சென்னை ஐகோர்ட்டு திறந்து விட்டுள்ளது. கடந்த 2009–ம் ஆண்டு மே மாதம் 20–ந் தேதி தமிழக அரசு சினிமா கட்டணம் தொடர்பாக ஒரு உத்தரவை பிறப்பித்தது. 18.4.2011–ல் அரசு சினிமா டிக்கெட் கட்டணப் பட்டியலை வெளியிட்டது. இதன்படி, சென்னையைத்தவிர மற்ற மாநகராட்சிகளுக்குட்பட்ட சினிமா தியேட்டர்களில் குறைந்த பட்சகட்டணம் ரூ.10 ஆகவும், அதிகபட்சம் ரூ.50 ஆகவும், நகராட்சிகளிலுள்ள தியேட்டர்களில் குறைந்தபட்சகட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்சம் ரூ.40 ஆகவும், பேரூராட்சிகளிலுள்ள தியேட்டர்களில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்சம் ரூ.25 ஆகவும், கிராம பஞ்சாயத்துகளிலுள்ள தியேட்டர்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்சம் ரூ.15 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

சென்னை நகர தியேட்டர்களை பொறுத்தவரை, குறைந்தபட்சகட்டணம் ரூ.10 ஆகவும், அதிகபட்சம் பல கட்டங்களாக இறுதியில், ரூ.120 வரையிலும் நிர்ணயிக்கப் பட்டிருந்தது. இதனை தியேட்டர் உரிமையாளர்கள் ஆட்சே பித்தனர். கட்டணத்தை உயர்த்தவேண்டும் என்றும், புதுப்படங்கள் ரிலீஸ் செய்யப்படும்போது முதல் இரண்டு வாரங்களுக்கு உரியகட்டணத்தை தாங்களே நிர்ணயித்துக் கொள்ள உரிமை வழங்கிய முன்பிருந்த நடைமுறையே தொடர வேண்டும் என்றும், 20 ஆண்டு களுக்கு மேற்பட்ட தியேட்டர்களில் ஆண்டுக்கு ஒருமுறை சோதனை செய்வதை தவிர்த்து, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சோதனையிட்டாலே போதுமானது என்று உத்தரவிட வேண்டும் என்றும் பலகோரிக்கைகளை தியேட்டர் உரிமை யாளர்கள் விடுத்திருந்தனர். இந்த 4 கோரிக்கைகளை யும் தமிழக அரசு நிராகரித்துவிட்டது. ஏற்கனவே தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் போடப்பட்ட வழக்கில், தியேட்டர் உரிமையா ளர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கவேண்டும் என்று பிறப்பித்த உத்தரவு அப்படியே இருக்கிறது. இதையெல்லாம் குறிப்பிட்டு, தியேட்டர் உரிமையாளர்கள் ஐகோர்ட்டுக்கு சென்றனர். 2009–ம் ஆண்டு இருந்ததைவிட, இப்போது கேளிக்கைவரி இருமடங்காகி விட்டது, ஊழியர்களின் சம்பளமும் உயர்ந்து விட்டது. மின்சாரக ட்டணமும் உயர்ந்திருக்கிறது. இப்படி எல்லா செலவுகளும் உயர்ந் துள்ள நிலையில், சினிமா கட்டணம் மட்டும் அதே விகிதத்தில் இருப்பது நியாய மில்லை. எனவே, கோர்ட்டு தலையிட்டு கட்டண உயர்வுக்கு ஆவனசெய்யவேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட பெஞ்சு, தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிராகரித்து ஏற்கனவே அரசு பிறப்பித்த உத்தரவை தள்ளுபடி செய்தது. அரசாங்கம் ஒருமாதத் திற்குள் தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நடைமுறைக்கேற்ற யதார்த்தமான உத்தரவு களை பிறப்பிக்கவேண்டும் என்று தீர்ப்பளித்தது.

அரசின் முடிவு, ரசிகர்களுக்கும், தியேட்டர் உரிமை யாளர்களுக்கும் கட்டுபடியாகும் அளவில் இருக்கவேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. ஏற்கனவே சினிமாதொழில் நசிந்துகொண்டிருக்கிறது. கடந்த  30 ஆண்டுகளுக்கு முன்பு டூரிங் தியேட்டர்கள் உள்பட  8 ஆயிரம் சினிமா தியேட்டர்கள் இருந்தன. 2000–ம் ஆண்டில் இது 2,339 தியேட்டர்களாக குறைந்தது. இப்போது 1,060 தியேட்டர்களும், 1,115 மல்டிபிளக்ஸ் ஸ்கிரீன்களும் இருப்பதாக தெரிகிறது. தியேட்டர்களுக்கு சென்று படம்பார்க்கும் விருப்பம் ரசிகர்களிடம் குறைந்துவருகிறது. டெலிவிஷன்களில் எந்த நேரமும் படங்கள் ஒளிபரப் பாகின்றன. படம் ரிலீசான அடுத்த சிலநிமிடங்களிலேயே திருட்டு வி.சி.டி. சர்வசாதாரணமாக ரூ.30–க்கு பிளாட் பாரத்தில் விற்பனைக்கு வந்துவிடுகிறது. ஆன்லைனில் பார்க்கும் வசதியும் இருக்கிறது. எனவே, நசிந்துவரும் சினிமாதொழில் காப்பாற்றப்பட வேண்டுமானால், சினிமா கட்டண நிர்ணயம் அரசு கையில் இல்லாமல், அந்தந்த தியேட்டர்களின் வசதி, திரையிடப்படும் படம் ஆகியவற்றைப் பொறுத்து வியாபார நோக்கில் சினிமா தியேட்டர்களே கட்டணத்தை நிர்ணயிக்க அனுமதி அளிப்பதையும் பரிசீலிக்கலாம்.  

English Summary : Cinema charge is going to be high

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.