News
Loading...

கிரானைட் மோசடி தொடர்கிறது

கிரானைட் மோசடி தொடர்கிறது

கிரானைட் குவாரிகளுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம், சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையில் சட்ட ஆணையம் அமைத்தது. அவரும் சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் பல்வேறு ஆபத்துகளுக்கு நடுவே மிகக் கடுமையாக  உழைத்து, விசாரணையை முடித்து அறிக்கையையும் கொடுத்துவிட்டார். ஆனால் அதன் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே பல மாதங்களாக சகாயம் அறிக்கை அப்படியே கிடக்கிறது.

இதற்கு இடையில், ‘நாங்கள் புதிதாக கிரானைட் கற்களை வெட்டி எடுக்க மாட்டோம். ஏற்கெனவே எடுத்த கற்களை விற்றுக்கொள்ள அனுமதி வேண்டும்’ என்று கிரானைட் அதிபர்கள் தரப்பு மதுரை உயர் நீதிமன்றம் போய் அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பும் வந்துவிட்டது. கிரானைட் அதிபர்கள் பக்கம் அதிகாரிகள் இருப்பதால் உண்மையில் பழைய கற்களை விற்கிறார்களா, புதிய கற்களைத் தோண்டுகிறார்களா என்பதே கண்டுபிடிக்க முடியாத நிலைமையில் ரகசியம் பரம ரகசியமாகப் போய்க்கொண்டு இருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உத்தரவு, சட்ட ஆணையத்தின் அறிக்கை அதைத் தாண்டியும் முறைகேடுகளைத் தொடர்ந்து செய்ய முடியுமானால் சட்டத்துக்கும், நீதிமன்றத்துக்கும் என்ன அதிகாரம் இருக்கிறது என்ற கேள்வி பூதாகரமாக எழுந்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...