News
Loading...

கமென்ட் கோயிந்து

கமென்ட் கோயிந்து

சென்னை விமான நிலையத்தை ரூ.2,587 கோடியில் நவீனமாக்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி: செய்தி
அந்தக் காசுல நல்லதா நாலு கட்டு தென்னங்கீத்து வாங்கி ஏர்போர்ட் கூரையை போட்டு விடுங்கய்யா, அதாவது நாலு வருஷத்துக்கு தாங்கும்!

அம்மா நலம் பெற வேண்டி அதிமுக நிர்வாகி தீக்குளித்து மரணம்: செய்தி
‘‘அந்தாளு தீக்குளிச்சப்போ நீங்க எங்க ஏட்டய்யா போனீங்க?’’ ‘‘ஃபேஸ்புக்ல 50 பேரை கண்காணிக்க போனேன் சார்!’’

நாமக்கல் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: செய்தி
இப்பல்லாம் ஆன்லைன்லயே பணத்தைத் திருட ஆரம்பிச்சிட்டானுக. இவனுக இன்னும் ஏ.டி.எம் மெஷினை உடைக்கிறது, வீட்டு பீரோவை உடைக்கிறதுன்னு சுத்திட்டு இருக்கானுவ!

லண்டன் டாக்டர் தனது விசிட்டிங் கார்டை என்னிடம் தந்தார்: வைகோ
புரியுதுண்ணே! உங்களோட அடுத்த அரசியல் ஆப்புரேசன் லன்டன்ல நடக்கப் போவுதுன்னு சிம்பாலிக்கா சொல்றீங்க... அதானே!

தமிழக உள்ளாட்சித் தேர்தல் ரத்து: உயர் நீதிமன்றம்
தீபாவளி செலவுக்கு வரும்னு பாத்தா, பொங்கல் செலவுக்குதான் வரும் போல!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.