News
Loading...

வார ராசிபலன் - கடகம்

வார ராசிபலன் - கடகம்

14.10.2016 முதல் 20.10.2016 வரை

கலை உணர்வுடன் பணியாற்றும் கடக ராசி அன்பர்களே!

வெள்ளி காலை 9.30 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், உதிரி வருமானங்கள் வந்து சேரும்.

உத்தியோகம்:   உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு இருந்தாலும், பொறுப்புகளில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

தொழில்:  சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைத்தாலும், அலைச்சலும் உழைப்பும் இருக்கும். கூட்டுத் தொழிலில் சிறு சலசலப்பு ஏற்படலாம். பங்குதாரர்களின் ஒற்றுமை பலப்படும். புதிய கூட்டாளியைச் சேர்க்க முயற்சிப்பீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் சிறு தேக்கம் ஏற்படக்கூடும்.

கலை :  கலைஞர்கள் புதிய வாய்ப்புகளினால் மகிழ்ச்சி அடைவீர்கள். சகக் கலைஞர் ஒருவருக்கு பொருளாதார உதவிகளைச் செய்ய நேரலாம்.

குடும்பம் :    குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருக்கலாம். புதிய கடன் வாங்கும் நிலை ஏற்படலாம். யாருக்கும் வாக்குக் கொடுத்தால் தொல்லைகளை சந்திக்கும்படி ஆகலாம்.

வார வழிபாடு:– சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய்
தீபமிட்டு வழிபடுவது நல்ல பலன்களை அளிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 5,8,9

அதிர்ஷ்ட நிறம்:– நீலம்

அதிர்ஷ்டக்கிழமை:– சனி

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.