News
Loading...

கன்னி ராசி நேயர்களுக்கான அக்டோபர் மாத ராசிபலன்

கன்னி ராசி நேயர்களுக்கான அக்டோபர் மாத ராசிபலன்

1-10-2016 முதல் 31-10-2016 வரை

கணித்தவர் : நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

கன்னி: (உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் வரை)

பொது: சுக்கிரன், சனி, கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக உள்ளது. 3-ஆம் தேதி முதல் புதன் ஜன்ம ராசிக்கு இடம் மாறினாலும் நலம் புரிவார். 13-ஆம் தேதி முதல் சுக்கிரன் 3-ஆமிடம் மாறுவது நல்லது. 17-ஆம் தேதி முதல் சூரியன் 2-ஆமிடம் மாறுவது விசேடமாகாது. 21-ஆம் தேதி முதல் புதன் 2-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். சூரியன், செவ்வாய், ராகு ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.

ஆரோக்கியம், குடும்பம்: மார்பு, நுரையீரல் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். குடும்ப நலம் சிறக்கும். விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும். பெண்களால் அனுகூலம் ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். பெற்றோர் நலனில் அக்கறை தேவைப்படும்.

பொருளாதார நிலை: பண வரவு அதிகமாகும். ஸ்பெகுலேஷன் துறைகள் ஓரளவு லாபம் தரும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும்.

நிலபுலங்கள்: சொத்து சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியமாகும்.

தொழில்: கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.
கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் செழிப்பான சூழ்நிலையைக் காண்பார்கள். போக்குவரத்து மற்றும் இயந்திரப்பணியாளர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. அரசுப்பணியாளர்களுக்குச் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும்.

மாதர்களுக்கு: மன மகிழ்ச்சி பெருகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும்.

மாணவர்களுக்கு: 3-ஆம் தேதி முதல் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். விளையாட்டின்போதும் பயணத்தின்போதும் பாதுகாப்புத் தேவை.

சந்திராஷ்டமம்: அக்டோபர் 16, 17, 18 (முற்பகல்).

அதிர்ஷ்ட தேதிகள்: அக்டோபர் 2, 3, 5, 6 (முற்பகல்), 11, 19, 28, 30

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.