News
Loading...

நாற்றம்... நச்சு... நாகர்கோவில் நகராட்சி!

நாற்றம்... நச்சு... நாகர்கோவில் நகராட்சி!

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பி.ஜே.பி. கைப்பற்றிய இரண்டு நகராட்சிகளில் நாகர்கோவிலும் ஒன்று. நகராட்சி தலைவியாக மீனாதேவ் இருக்கிறார். நகராட்சி துணைத் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்ந்தெடுப் பில் தி.மு.க கவுன்சிலர் அ.தி.மு.க அணிக்கும், அ.தி.மு.க கவுன்சிலர் தி.மு.க அணிக்கும், காங்கிரஸ் கவுன்சிலர்கள் பி.ஜே.பி மற்றும் அ.தி.மு.க அணிக்கும் வாக்களித்த வேடிக்கையும் நாகர்கோவிலில் நடந்தது.

‘‘நாடாளுமன்ற தேர்தலில் இங்கு பிரசாரத்துக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா நாகர்கோவிலை மாநகராட்சியாக மாற்றுவேன் என்றார். ஆனால், இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் 10 நகராட்சி கமிஷனர்கள், 5 முதன்மை பொறியாளர்கள் மாற்றப் பட்டதும் இங்கேதான். இந்த நகராட்சியை பொறுத்தவரை மொத்தம் உள்ள 52 வார்டுகளில் 25 வார்டுகளில் துப்புரவுப் பணியாளர்களைக்  கொண்டு குப்பைகளை அகற்றி வருகின்றனர். மற்ற வார்டுகளில் தனியார் மூலமாகக் குப்பைகளை அகற்றுகிறார்கள். போதிய துப்புரவுப் பணியாளர்கள் இல்லாமல், கழிவுகளை அகற்றும் பணி நடப்பதால் நகராட்சி பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளன. இதனால் கண் எரிச்சல் ஏற்படுவதோடு துர்நாற்றமும் வீசுகிறது. மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளக் கூடாது என்ற நீதிமன்ற தீர்ப்பை மீறி சாக்கடையில் நகராட்சி ஊழியர்களை இறக்கி கழிவுகளை அகற்றவைக்கும் பரிதாபம் நாகர்கோவில் நகராட்சியில்தான் நடக்கிறது.

நகராட்சியில் குப்பை சேகரிக்கும் தனியார் நிறுவனம் மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து வழங்க வேண்டும். ஆனால், கடந்த மூன்று வருடங்களாக அந்த நடைமுறை பின்பற்றப் படவில்லை. வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் மின்சாரம் தயாரிக்கும் பயோ காஸ் திட்டத்துக்கு தினமும் ஐந்து டன் காய்கறி கழிவுகள் தேவை இருந்தும் குப்பைகள் பிரித்து வழங்கப்படவில்லை. வலம்புரிவிளை குப்பை கிடங்கில் பாதாள சாக்கடை திட்டத்துக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய இருப்பதாகக் கூறப்பட்டது அதுவும் இன்னும் வரவில்லை. குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் என்ன நிலையில் இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை.

எங்கும் குண்டும் குழியுமான ரோடுதான். பாதாள சாக்கடை திட்டத்துக்காக நகர ரோடுகளை பாழாக்கிவிட்டனர்.  நகராட்சியில் குடிநீர் தினமும் வழங்கப்படாமல் உள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட கட்டடங்களுக்கான அனுமதி, குடிநீர் இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்று வழங்குதல் என எந்த வேலையாக இருந்தாலும் பணம் கொடுத்தால் மட்டுமே நகராட்சியில் வேலை நடக்கிறது. நகராட்சியில் வழங்கப்பட்டு வரும் குடிநீரில் கொசு மற்றும் புழுக்கள் அடிக்கடி நெளிகிறது. நகராட்சி பகுதியில் சாக்கடை கழிவுநீர் பழையாற்றில் கலப்பதால் நகரின் குடிநீர் ஆதாரம் கேள்விக் குறியாகியுள்ளது.

நகராட்சியில் கடந்த 10 வருஷங்களுக்கு மேல் துணைத்தலைவர் சைமன் ராஜ், சேகர், அழகம்மாள் தாஸ், ராமகிருஷ்ணன், டி.ஆர்.செல்வம், நாகராஜன், உதயகுமார், சகாயராஜ் போன்றவர்கள் கவுன்சிலர் பதவியை உடும்புப்பிடியாய் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். நகராட்சியில் எல்லாமே இவர்கள்தான். நகராட்சி தலைவியான மீனாதேவ் எதையும் கண்டுகொள்வது இல்லை. கவுன்சிலர்கள் இப்போது கார், வீடு, பல வீடு என சொகுசாக வாழ்கிறார்கள்’’ என்று மக்கள் புலம்புகிறார்கள்.

“மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. ஆனால், நாகர்கோவில் நகராட்சியில் தூய்மை என்பது பல்வேறு இடங்களில் கேள்விக்குறியாகி உள்ளது.  மத்திய பி.ஜே.பி-யின் தூய்மை இந்தியா திட்டத்தை நாகர்கோவில்.

நாற்றம்... நச்சு... நாகர்கோவில் நகராட்சி!

பி.ஜே.பி. கண்டுகொள்ளவே இல்லை. சாலைகளின் ஓரமாகக் குப்பைகள் சிறு சிறு குன்றுகளாகக் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. நகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை பணிகள் நடந்து பல இடங்களில் சாலைகள் போடப்படாதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பணக்காரர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் குடியிருக்கும் சந்து பொந்துகளில் துரிதமாக சீரமைக்கும் நகராட்சி பெரும்பான்மையாக மக்கள் புழங்கும் பெரிய சாலைகளை சீரமைக்கவில்லை. நாகர்கோவில் நகராட்சியில் 52  வார்டுகளிலும் சாலை மற்றும் தெருக்களை பராமரிக்கிறோம் என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் மக்கள் வரி பணத்தை வீணடித்த கவுன்சிலர்கள் அனைவர் மீதும் வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார் சமூக ஆர்வலர் ராம்.

இந்த நிலையில் கமிஷன் தொகைக்காக கவுன்சிலர்கள் பணி ஆணை வழங்கவிடாமல் அதிகாரிகளைத் தடுத்து வைத்து நகராட்சியில் உள்ளடி வேலைகளையும் செய்கின்றனர் என்றும் பேசப்படுகிறது.

நாகர்கோவில் நகராட்சியில் பி.ஜே.பி., தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., த.மா.க. என எல்லா கவுன்சிலர்களும் ஒரு விஷயத்தில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். மக்களின் வரிப் பணத்தை பங்கு போட்டுவதில்தான் அந்த ஒற்றுமை என்பதே மக்களின் புலம்பலாக இருக்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...