News
Loading...

மல்லி-சாமைச் சோறு

மல்லி-சாமைச் சோறு

தேவையானவை: சாமைப் புழுங்கல் அரிசி - 200 கிராம், கொத்தமல்லி - ஒரு கட்டு, புதினா, கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சைமிளகாய் - 4, இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய் - 3, பட்டை - 5, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, இஞ்சி, பூண்டு இவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய்விட்டு பட்டை, ஏலக்காய் சேர்த்து வாசம் வர வறுத்து, அத்துடன் அரைத்துவைத்துள்ள கலவையைச் சேர்த்து நன்றாக வதக்கவும். இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி (1:2 என்ற விகிதத்தில்) குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வைத்து இறக்கவும். இதனுடன் கேரட், வெள்ளரி, வெங்காயம் சேர்த்து, தயிர் பச்சடியாகவும் செய்து சாப்பிடலாம்.

பலன்கள்: புரதச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்கள் அதிகம் நிறைந்துள்ளது. கொழுப்பைக் குறைக்கும். பசியைக் கட்டுப்படுத்தும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.