
14.10.2016 முதல் 20.10.2016 வரை
துணிவோடு காரியங்களைச் செய்யும் சிம்ம ராசி அன்பர்களே!
வெள்ளி காலை 9.30 மணி முதல் ஞாயிறு பகல் 12.30 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், கவனம் தேவை.
உத்தியோகம்: உத்தியோகஸ்தர்கள் நினைத்தது நடைபெறும். எதிர்பாராத பண வரவுகள் கைக்குக் கிடைக்கலாம்.
தொழில்: சொந்தத் தொழில் செய்பவர்கள் வியாபாரத்தில் நல்ல திருப்பங்களைச் சந்திக்கலாம். பணியாளர்கள் சிறந்த முறையில் ஒத்துழைப்புத் தருவார்கள். கூட்டுத்தொழிலில் இருந்த மந்தமான நிலை மாறி சுறுசுறுப்பு ஏற்படும். கைகளில் பணம் புழங்கும். பங்குச்சந்தை வியாபாரிகள் நல்ல லாபம் காணுவர்.
கலை : கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் திருப்பம் காண்பர். விருது, பாராட்டுகள் பெற வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.
குடும்பம் : குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். தொலைபேசி மூலம் வரும் நல்ல செய்தி திருப்பத்தை ஏற்படுத்தும். அரசாங்கத்தினால் சிறு உதவி ஏற்பட வாய்ப்புண்டு. தெய்வீகமான எண்ணங்கள் மேம்படும்.
வார வழிபாடு:– ஞாயிற்றுக்கிழமை விநாயகப் பெருமானுக்கு
அருகம்புல் மாலை சூட்டி வழிபட்டால் தடைகள் அகலும்.
அதிர்ஷ்ட எண்கள்:– 1,5,7
அதிர்ஷ்ட நிறம்:– சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை:– ஞாயிறு
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.