News
Loading...

மாநகராட்சி ஊழியர்கள் வசூல் வேட்டை

மாநகராட்சி ஊழியர்கள் வசூல் வேட்டை

மதுரை மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்களின் உத்தரவின் பேரில் ஊழியர்கள், நிறுவனங்களில் தீபாவளி வசூல் வேட்டையை துவக்கியுள்ளனர். ஒத்துழைப்பு கொடுக்காதோர் மிரட்டப்படுகின்றனர்.

மாநகராட்சியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக துப்புரவு ஆய்வாளர்கள் ஒரே இடத்தில் பணிபுரிகின்றனர். சுகாதாரப் பணிகளுக்கு வசூல் நடத்துவதாக இவர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதன் அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு முன் அனைவருக்கும் இடமாறுதல் உத்தரவை துணை கமிஷனர் சாந்தி வழங்கினார். ஆனால் உத்தரவுகள் இவர்களுக்கு வழங்கப்பட்ட அன்று மாலையே இந்த உத்தரவை மேயர் பொறுப்பு (திரவியம்) நிறுத்தி வைத்தார்.

உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர்கள் விபரங்கள் சேகரிப்புக்கு இந்த மாறுதல் இடையூறாக இருக்கும் என்ற காரணம் தெரிவிக்கப்பட்டது. அந்த பணி முடிந்ததும் மாற்றம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.ஆனால் தேர்தலுக்காக ஏற்பாடுகள் நடந்து தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட பின்னும் இவர்கள் இன்னும் இடமாற்றம் செய்யப்படவில்லை.

தற்போது இந்த துப்புரவு ஆய்வாளர்களில் சிலர் இடமாற்றம் உத்தரவை நிரந்தரமாக நிறுத்துவதாக கூறி இடமாற்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளோரிடம் தலா 5,000 ரூபாய் வசூல் நடத்தி வருகின்றனர்.

இவர்கள் பணிபுரியும் எல்கைக்கு உட்பட்ட இடங்களில் உள்ள நிறுவனங்களில் பல ஆயிரம் ரூபாய் தீபாவளி வசூல் நடத்துகின்றனர். இதற்கு ஒத்துழைக்காத நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் குப்பையை அகற்றாமல் எதிர்ப்புகளை தெரிவிக்கின்றனர். வீடுகளிலும் சிறு அளவில் வசூல் நடத்துகின்றனர்.

பொதுமக்களிடம் கட்டாய வசூல் நடத்தும் இவர்களை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இடமாற்ற உத்தரவையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...