News
Loading...

துலாம் ராசி நேயர்களுக்கான அக்டோபர் மாத ராசிபலன்

துலாம் ராசி நேயர்களுக்கான அக்டோபர் மாத ராசிபலன்

1-10-2016 முதல் 31-10-2016 வரை

கணித்தவர் : நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

துலாம்: (சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் வரை)

பொது: செவ்வாய், புதன், சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக உள்ளது. 3-ஆம் தேதி முதல் புதன் 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 13-ஆம் தேதி முதல் சுக்கிரன் 2-ஆமிடம் மாறுவது நல்லது. 17-ஆம் தேதி முதல் சூரியன் ஜன்ம ராசிக்கு மாறுவது குறை ஆகும். 21-ஆம் தேதி முதல் புதன் ஜன்ம ராசிக்கு மாறினாலும் நலம் புரிவார். சூரியன், குரு, கேது ஆகிய கிரகங்களுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.

ஆரோக்கியம், குடும்பம்: கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். குடும்ப நலம் சீராக இருந்துவரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். பிற மொழி, மத, இனக்காரர்களால் நலம் உண்டாகும். மக்கள் நலனில் அக்கறை தேவைப்படும். தந்தையால் செலவுகள் ஏற்படும்.

பொருளாதார நிலை: பண வரவு குறைந்து செலவுகள் கூடும். சிக்கன நடவடிக்கை தேவை.

நிலபுலங்கள்: சொத்துக்களால் வருவாய் கிடைக்கும். புதிய சொத்துக்களின் சேர்க்கையும் நிகழும். வாகன யோகம் உண்டாகும்.

தொழில்: கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். இன்ஜினீயர்களது நிலை உயரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் விருத்தி அடையும். சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை பல ஆற்றுவார்கள். உத்தியோகஸ்தர்கள், நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோர் பொறுப்புடன் காரியமாற்றுவது அவசியமாகும்.

மாதர்களுக்கு: மன மகிழ்ச்சி பெருகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். மதிப்பு உயரும்.

மாணவர்களுக்கு: படிப்பில் அதிக கவனம் தேவை. வெளிநாடு சென்று படிக்க சிலருக்கு வாய்ப்புக் கூடிவரும்.

சந்திராஷ்டமம்: அக்டோபர் 18, 19, 20 (முற்பகல்).

அதிர்ஷ்ட தேதிகள்: 2, 3, 5, 6 (முற்பகல்),11, 16, 28, 30

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.