News
Loading...

மனிதர்கள் உருவாக்கிய தீவு

மனிதர்கள் உருவாக்கிய தீவு

*கிழக்குக் கரீபியக் கடலில் பிரிட்டனைச் சார்ந்த  60 தீவுக்கூட்டங்கள் ‘வர்ஜின் தீவுகள்’ என அழைக்கப்படுகின்றன. இதில் பெரியது டார்டோலா தீவு. இதில் சில தீவுகள் தனியாருக்கு உரிமையானவை. 

ரிச்சர்ட் பிரான்சன் என்பவருக்கு மாஸ்லுய்டோ (Mos1uito), நெக்கர் (Necker) என்ற 2 தீவுகள் சொந்தமாக உள்ளன. இங்கு வரிச்சலுகைகள் அதிகம் என்பதால் வசதி படைத்தோர் இத்தீவுகளை போட்டி போட்டு விலைக்கு வாங்குகின்றனர்.

*அமெரிக்காவின் மத்திய அட்லாண்டிக் பகுதி மாநிலமான  டெலவரில் (Delaware) வரிச்சலுகைகள் அதிகம் என்பதால் அமெரிக்காவின்  மொத்த பொதுக் கழக நிறுவனங்களில் 50 சதவிகிதம் இந்த மாநிலத்தோடு இணைந்துள்ளன. இந்த மாநிலத்தின் மக்கள் தொகையைவிட, இங்குள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகம்.

*சுவிட்சர்லாந்தில் 1934ல் இயற்றப்பட்ட வங்கிச் சட்டப்படி, இங்கு வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

*1869ம் ஆண்டிலிருந்து மொனாக்கோ நாட்டில் வருமான வரி என்பது கிடையாது. இங்கு தொழிலதிபர்களும் விளையாட்டு வீரர்களும் குடியேற வேகம் காட்டுகின்றனர்.

*இங்கிலாந்திற்கும் பிரான்சிற்கும் நடுவே அமைந்துள்ளது ஜெர்ஸி தீவு (Jersey Island). ஜெர்ஸி பசு, ஜெர்ஸி துணி எல்லாமே இப்பெயராலேயே அழைக்கப்படுகிறது. 

*டிசம்பர் 22, 1941 அன்று  Archie Comics என்ற காமிக் புத்தகம் வெளிவந்தது. 2011ல் இதன் பிரதி ஒன்று 1 லட்சத்து 67 ஆயிரத்து 300 டாலர்களுக்கு ஏலத்தில் விலை போனது.

*மேற்கத்திய உலகம் சந்தித்த கடுமையான பொருளாதார நெருக்கடியின்போது (1929-1939) ஆஸ்திரியாவைச் சேர்ந்த மாக்ஸ் ஃப்ளைஷர் என்ற அனிமேஷன் சித்திரக்காரர் அமெரிக்காவில் தனது அறையில் அமைதியாக அமர்ந்து ‘பெட்டி பூப்’ (Betty Boop) என்ற பிரபல கேலிச் சித்திர திரைப்படத் தொடரை உருவாக்கினார்.

*அமெரிக்காவில் 18 வயதிலிருந்து 34 வயதிற்குள் உள்ளவர்களை ‘மில்லெனியல்ஸ்’ என்றும் 70 வயதானவர்களை ‘பேபி பூமர்ஸ்’ என்றும் வகைப்படுத்தியுள்ளனர். 2015 நிலவரப்படி இவர்கள் முறையே 75.4 மில்லியன் மற்றும் 74.9 மில்லியன் என்ற எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.

*இந்தோனேஷியாவில் பண்டுங் பகுதியில் அக்டோபர் 17, 1947 அன்று உருவான Paskhas என அழைக்கப்படும் இந்தோனேஷிய விமானப்படை சிறப்புப் பிரிவு (ஆரஞ்சு நிற தொப்பி அணிந்திருப்பவர்கள்) பகவத் கீதையில் இடம் பெற்றுள்ள  ‘கர்மான்ய வடிக்கரஸ்த்தி மாபலிசு கடச்சனா’ என்பதை மேற்கொள் வாசகமாக (motto)  கொண்டுள்ளது. இதற்கு ‘லாப நஷ்டத்தைக் கணக்கிடாமல் பணியாற்ற வேண்டும்’ என்று அர்த்தம்.

*மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் உள்ள பனாமா கால்வாய் 77 கி.மீ. நீளமுடையது. இது அடைக்கும் தாழ்களுடன் கூடிய ஏரி வகைக் கால்வாய் ஆகும். பனாமா கால்வாய் திட்டத்தின் ஒரு அங்கமான கடுன் ஏரி 1912ல் சாக்ரஸ் ஆற்றில் அணை கட்டப்பட்டபோது உருவானது. ஒருகாலத்தில் இது மனிதனால் உருவாக்கப்பட்ட தீவுகளிலேயே மிகப்பெரியதாகத் திகழ்ந்தது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.