News
Loading...

வார ராசிபலன் - மிதுனம்

வார ராசிபலன் - மிதுனம்

14.10.2016 முதல் 20.10.2016 வரை

காரியங்களை வெற்றியாக்கும் மிதுன ராசி அன்பர்களே!

பெரும்பாலான காரியங்களில் நிதானம் தேவை. வீண் விவாதங்களைத் தவிர்ப்பது அவசியம்.

உத்தியோகம்:   உத்தியோகஸ்தர்கள் நிதானமாகவும், பொறுமையாகவும் தங்கள் பணிகளில் ஈடுபடவேண்டும். கொடுக்கல், வாங்கலிலும் கவனம் தேவை.

தொழில்: சொந்தத்தொழில் செய்பவர்கள், பண விஷயத்தில் பாதுகாப்பாக இருப்பது அவசியம். நிலுவையை வசூலிப்பதில் தாமதம் ஏற்படலாம். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பங்குச்சந்தையில் லாபம் எதிர்பார்க்கும் அளவு இருக்கலாம்.

கலை :  கலைத்துறையினர் வாய்ப்புகளைப் பெற முயற்சிகளை மேற்கொள்ளும்படி இருக்கும்.

குடும்பம் :    குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெண்களே சாமர்த்தியமாகச் சமாளித்து விடுவார்கள். கோர்ட்டு வழக்குகளில் திருப்பம் நேரலாம். அரசாங்கத்திலிருந்து சிறு நன்மை ஏற்படலாம்.

வார வழிபாடு:– திங்கட்கிழமை சந்திர பகவானுக்கு மலர்மாலை
அணிவித்து வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 1,2,9 
அதிர்ஷ்ட நிறம்:– வெண்மை

அதிர்ஷ்டக்கிழமை:– திங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.