News
Loading...

ஜெ. கார் பார்க்கிங்கில் ஓ.பி.எஸ்.ஸின் கார்!

ஜெ. கார் பார்க்கிங்கில் ஓ.பி.எஸ்.ஸின் கார்!

தலைமை செயலகத்துக்கு வரும் முதல்வரின் கார் முதல்வர் அலுவலகம் அருகில் இருக்கும் போர்ட்டிகோவில்தான் நிறுத்தப்படும். வேறு எந்த காருக்கும் அங்கு நிறுத்த அனுமதி கிடையாது. இப்போது முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் ஆன நிலையில் அவரின் துறைகளை    ஓ.பன்னீர்செல்வம்தான் கையில் வைத்திருக்கிறார். முதல்வரின் கார் நிற்கும் போர்ட்டிகோவில்       ஓ.பன்னீர்செல்வத்தின் கார் நிற்பதை ஆச்சர்யத்தோடு பார்க்கிறார்கள். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை விதிக்கப்பட்டு, பதவி இழந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். அப்போதுகூட முதல்வர் அறையை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தவில்லை. ஆனால், இப்போது ஜெயலலிதாவின் கார் பார்க்கிங்கைப் பயன்படுத்துவது ஆச்சர்யம்தான்.

ஜெயலலிதா பயன்படுத்தும் லாண்ட் க்ரூஸர் காரைப் போலவே புதிய காரை வாங்கியுள்ளார் ஸ்டாலின்

இன்னொரு ஆச்சர்யம்... ஜெயலலிதா பயன்படுத்தும் லாண்ட் க்ரூஸர் காரைப் போலவே புதிய காரை வாங்கியுள்ளார் ஸ்டாலின். காரின் கலரும் ஜெயலலிதா காரின் நிறமான சில்வர் கலர்தான். ஆளுங்கட்சி தலைவரும், எதிர்க் கட்சி தலைவரும் ஒரே ரக காரில் பவனிவர உள்ளார்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...