News
Loading...

வார ராசிபலன் - விருச்சிகம்

வார ராசிபலன் - விருச்சிகம்

14.10.2016 முதல் 20.10.2016 வரை

எடுத்த காரியத்தில் வெற்றி பெறும் விருச்சிக ராசி அன்பர்களே!

வியாழன் மாலை 5.30 மணி முதல் சந்திராஷ்டமம் உள்ளதால், பயணங்களை தவிர்ப்பது நல்லது.

உத்தியோகம்:   அலுவலகத்தில் பணியாற்றுவோர் புதிய திருப்பம் காண்பார்கள். சிலருக்கு வெளியூர் மாற்றத்தோடு பதவி உயர்வும் கிடைக்கக் கூடும்.

தொழில்:  சொந்தத்தொழில் செய்பவர்கள் வியாபாரத்தில் கவனமாக நடந்து கொள்வது நலம். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த சிரமங்களைச் சந்திப்பீர் கள். கூட்டுத்தொழிலில் லாபம் இருந்தாலும் அலைச்சல் கூடும். பங்குச்சந்தை வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் சேருவர்.

கலை :  கலைத்துறையினர் தொழிலில் ஏற்றம் காணுவீர். புதிய ஒப்பந்தங்கள் பொருளும், புகழும் கொண்டு வரும்.

குடும்பம் :    குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருக்கலாம். சுபகாரியங்கள் சிறிய தடைக்குப் பின்னர் நடைபெறும். நண்பர்களும், உறவினர்களும் தக்க சமயத்தில் உதவிகரமாக இருப்பர்.

வார வழிபாடு:– செவ்வாய்க்கிழமை அங்காரக பகவானுக்கு
சிவப்பு மலர்மாலை சூட்டி வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 1,2,9 
அதிர்ஷ்ட நிறம்:– சிவப்பு

அதிர்ஷ்டக்கிழமை:– செவ்வாய்

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...