News
Loading...

மகரம் ராசி நேயர்களுக்கான அக்டோபர் மாத ராசிபலன்

மகரம் ராசி நேயர்களுக்கான அக்டோபர் மாத ராசிபலன்

1-10-2016 முதல் 31-10-2016 வரை

கணித்தவர் : நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

மகரம்: (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் வரை)

பொது: புதன், குரு, சனி ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக உள்ளது. சுக்கிரன் 10-ல் இருந்தாலும் நலம் புரிவார். 3-ஆம் தேதி முதல் புதன் 9-ஆமிடம் மாறுவது கோசாரப்படி சிறப்பாகாது என்றாலும் நலம் உண்டாகும். 13-ஆம் தேதி முதல் சுக்கிரன் 11-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். 17-ஆம் தேதி முதல் சூரியன் 10-ஆமிடம் மாறுவது நல்லது. 21-ஆம் தேதி முதல் புதன் 10-ஆமிடம் மாறுவதும் குறிப்பிடத்தக்கது. செவ்வாய், ராகு, கேது ஆகிய கிரகங்களுக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்து வருவது நல்லது.

ஆரோக்கியம், குடும்பம்: தோல், நரம்பு சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் சலசலப்புக்கள் குறையும். நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். வேலையாட்களால் நலம் உண்டாகும். மாதப்பின்பகுதியில் தந்தையால் அனுகூலம் ஏற்படும்.

பொருளாதார நிலை: பண நடமாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். 2-ல் கேதுவும், 12-ல் செவ்வாயும் இருப்பதால் வீண் செலவுகளைத் தவிர்ப்பதுடன் கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது.

நிலபுலங்கள்: சொத்து சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.

தொழில்: வியாபாரம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.
எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். தொழிலாளர்களது எண்ணம் ஈடேறும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள் லாபம் தரும். மாதப் பின்பகுதியில் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவற்றைப் பெறச் சந்தர்ப்பம் உருவாகும்.

மாதர்களுக்கு: முக்கியமான காரியங்கள் இனிது நிறைவேறும். மன உற்சாகம் பெருகும்.

மாணவர்களுக்கு: முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். உயர் கல்வி பயில வெளிநாடு செல்லும் வாய்ப்புச் சிலருக்கு ஏற்படும்.

சந்திராஷ்டமம்: அக்டோபர் 24 (இரவு), 25, 26.

அதிர்ஷ்ட தேதிகள்: அக்டோபர் 2, 3, 5, 6 (முற்பகல்), 11, 16, 19, 28, 30.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.