News
Loading...

மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் யுனிகோடு!

மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் யுனிகோடு!

நீதித் துறைக்குள் ஒளிந்து கிடக்கும் புதிர்களும், மர்ம முடிச்சுகளும், ராணுவ ரகசியங்களுக்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல. அந்த மர்ம முடிச் சுகளை அவிழ்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது மத்திய அரசு. 

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு, ‘யுனிகோடு’ என்ற திட்டம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு நீதிபதிக்கும் சிறப்புக் குறியீடு அடையாள எண்கள் வழங்கப்பட உள்ளன. இதன் விளைவாக, நீதிபதிகளின் தரம் ஆவணப்படுத்தப்படும். மேலும், ஆன்லைனில் உள்ள நீதிபதிகளின் தீர்ப்புகள், சட்டபூர்வமான அங்கீகாரத்தைப் பெறும். 

நீதிபதிகளின் தரம்

நீதிபதிகளுக்கான யுனிகோடு என்பது, ஒரு நீதிபதி, பணியில் இருக்கும்போது விசாரித்த வழக்குகளின் எண்ணிக்கை, ஒரு வழக்கில் தீர்ப்பளிக்க அந்த நீதிபதி எடுத்துக்கொண்ட காலம், ஒரு நீதிபதி தள்ளுபடி செய்த வழக்கு களின் எண்ணிக்கை, தீர்ப்பளித்த வழக்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பதிவுசெய்வ தற்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நீதிபதியின் தரம் கண் காணிக்கப்படும். நீதித்துறை நடவடிக்கை களை ஆவணப்படுத்தி வைக்கும், தேசிய நீதித் துறை புள்ளிவிவர அமைப் பிடம் (National Judicial Data Grid), இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் தேங்கிக்கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் முக்கியமானத் தீர்ப்புகள் பற்றிய விவரங்கள் உள்ளன. ஆனால், நீதிபதிகள் பற்றிய தனித்தனி ஆவணக்குறிப்புகள் இதுவரை இல்லை. குறிப்பாக, ஒரு நீதிபதி தன் பணிக்காலத்தில் எத்தனை வழக்குகளை விசாரித்தார், எத்தனை வழக்குகளில் தீர்ப்பு அளித்தார், எத்தனை வழக்குகளைத் தள்ளுபடி செய்தார் போன்ற விவரங்கள் இல்லை. நீதிபதிகளுக்குத் தனித்தனி யுனிகோடு வழங்கப்பட்டுவிட்டால், இந்த விவரங்களும் துல்லியமாகக் கணக்கில் கொள்ளப்படும். 

ஆன்லைன் தீர்ப்புகளுக்கு அங்கீகாரம்

நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகள் தற்போது உடனுக்குடன் ஆன்லைனில் பதிவுசெய்யப் படுகின்றன. அதை  யார்  வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். ஆனால், ஆன்லைனில் பதிவு செய்யப்படும் தீர்ப்புகளுக்கு சட்ட அங்கீகாரம் இதுவரை கிடையாது. அதாவது, ஒரு நீதிபதி வழங்கிய தீர்ப்பை, வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆன்லைனில் இருந்து, டவுண்லோடு செய்துகொண்டுபோய், அரசாங்க அலுவலகங்களில் கொடுக்க முடியாது. அப்படிக் கொடுத்து, தனக்காக நிவாரணத்தைக் கேட்க முடியாது. ஏனென்றால், அரசு அலுவலகங்களில், ‘certified copy’ என்று சொல்லப்படக்கூடிய, கையெழுத்து மற்றும் நீதிமன்ற முத்திரையுடன் கூடிய நகலைக் கேட்பார்கள். அதைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். எத்தனை நகல்கள் தேவையோ, அத்தனைக்கும் பணம் செலுத்த வேண்டும். அதன்பிறகு, நகல் எடுக்கப் பட்ட ஒவ்வொரு பக்கத்திலும், நீதிமன்றப் பதிவாளர் கையெழுத்துப் போட வேண்டும். நீதிமன்ற முத்திரை வைக்கப்படவேண்டும். அதன்பிறகு, அதைக் கொடுத்தால்தான், அரசு அலுவலகங்களில், சிறைத் துறையில் வேலை நடக்கும். ஆனால், நீதிபதிகளுக்கான யுனிகோடு முறை நடைமுறைக்கு வந்துவிட்டால், இந்த சிக்கல் தீர்ந்துவிடும். 

யுனிகோடு சிறப்பு

ஒவ்வொரு நீதிபதிக்கும் ஒரு அடையாள எண் வழங்கப்படும். அதன்மூலம், தேசிய நீதித் துறை தகவல் மையத்தில் உள்ள சர்வரில் நுழைந்து, நீதிபதிகள் தங்களின் தீர்ப்புகளைப் பதிவேற்றம் செய்யலாம். அதில், எலக்ட்ரானிக் கையெழுத்துப் போடும் வசதியும் உள்ளது. அந்தக் கையெழுத்துக்கு சட்ட அங்கீகாரம் உண்டு. இப்படி பதிவேற்றம் செய்யப்பட்ட தீர்ப்புகளை சம்பந்தப்பட்டவர் தரவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளிடம் கொடுக்கலாம். அவர்கள், இதே தீர்ப்பை, டவுண்லோடு செய்து இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து நிவாரணத்தை வழங்குவார்கள். இதன்மூலம் நிறைய பொருள் செலவும், கால விரயமும் தவிர்க்கப்படும்.  

இதுபற்றி விரிவாக அறிந்து கொள்ள, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவிடம் கேட்டோம். 

காலத்தின் கட்டாயம்

மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் யுனிகோடு!

“நீதிபதிகளுக்கு, சிறப்பு அடையாள எண்கள் வழங்கப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது பற்றி நீதிபதிகள் யாரும் அதிர்ச்சிடையவில்லை; அவர்கள் அதிர்ச்சி அடையத் தேவையும் இல்லை. ஏனென்றால், இது ஏதோ நீதிபதிகளின் தனிப்பட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கான முயற்சி அல்ல. நீதித் துறையின் ஆவணங்களைக் கம்ப்யூட்டர்மயம் ஆக்கும் முயற்சியின் ஒரு பகுதிதான். நீதித் துறையில் பதியப்படும் ஆவணங்கள் எலக்ட்ரானிக் முறையில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். அவ்வளவுதான். இது இன்றைய காலத்தின் கட்டாயம். இதன்மூலம் ஆன்லைன் தீர்ப்புகள் சட்ட அங்கீகாரம் பெறும். 

தகவல் தொழில்நுட்பச் சட்டம்

தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. ஆனால், அதில் பல பிரிவு கள் இன்னும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட வில்லை. அதற்கான நடைமுறை விதிகளைக் கூட இன்னும் மத்திய அரசு வகுக்கவில்லை. மத்திய அரசின் மெத்தனம்தான் இதுபோன்ற தாமதங் களுக்குக் காரணம். மின்னியல் ஆவணங்கள் கணினிமயப்படுத்தப்பட்ட பிறகு அவற்றை சான்றிதழ் பெற்ற ஆவணங்களாக அறிவிப்பதற்கு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 3-வது பிரிவு வழிவகுக்கிறது. அந்தச் சட்டப்பிரிவில் திருத்தம் செய்யப்பட்டு, அக்டோபர் 27, 2009-ல் 3A என்ற உபபிரிவும் உருவாக்கப்பட்டது. அதில், எலக்ட்ரானிக் கையெழுத்துகள் பெறுவது பற்றித் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, எலக்ட்ரானிக் கையொப்பம் இடப்படும் ஆவணங்கள் சட்டப்படி ஏற்றுக்கொள்ளத் தக்கதாகும். அதைத்தான் இந்த யுனிகோடு முறை சாத்தியமாக்க உள்ளது. நீதிபதிகள் தாங்கள் வழங்கும் தீர்ப்புகளுக்கு இதுபோல கையொப்பம் இடுவது, அதிகாரபூர்வமான தீர்ப்புகளாக ஏற்றுக்கொள்ளப்படும். இதனால் காலவிரயமும் பொருள் விரயமும் ஏற்படுவது குறையும்.

இப்பொழுது பல வழக்காடிகளின் புலம்பல் என்னவென்றால், நீதிபதிகள் தீர்ப்பளித்த பிறகும், தீர்ப்பின் சான்றிதழ் பெற்ற நகல்களைப் பெறுவதற்கு மாதக்கணக்கிலும் சில சமயங்களில் ஆண்டுக் கணக்கிலும் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், வக்கீல்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் மனக்கசப்பு ஏற்படுகிறது. தீர்ப்பை நடைமுறைப்படுத்தவேண்டிய அதிகாரிகளும், சான்றிதழ் பெற்ற நகல்கள் கிடைக்கப் பெறாமையால் காலம் கடத்தும் சூழ்நிலை உள்ளது. தீர்ப்பினால் பாதிக்கப்பட்டவர்கள், மேல்முறையீட்டு மன்றங்களில் உடனடியாக மேல் முறையீடு செய்ய முடிவதில்லை. 

இதுதான் தீர்வு 

நீதிபதிகளுக்கு தனிப்பட்ட அடையாளக் குறியீடுகள் வழங்கும் சூழ்நிலையில், அவர்களது தீர்ப்புகள் உடனடியாக வலைதளத்தில் ஏற்றப்படும். அதை பதிவிறக்கம் செய்து கட்சிக்காரர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 4-வது பிரிவில் இப்படிப்பட்ட மின்னியல் ஆவணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படும் ஜாமீன் உத்தரவுகள், இ-மெயில் மூலமே சிறைத்துறைக்கு அனுப்பப்படுகின்றன. அதைப் பெற்றுக்கொள்ளும், சிறை அதிகாரிகள் உடனடியாக கைதிகளை விடுவிக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் நீதிபதி ஜாமீன் வழங்கினாலும், அந்த உத்தரவு நகலைப் பெறுவதற்கு இமாலய முயற்சிகள் செய்ய வேண்டும். பல இடங்களில் மிகப்பெரிய ‘அன்பளிப்பு’  எல்லாம் வழங்கியாக வேண்டும். சிறப்பு அடையாள எண் வந்துவிட்டால், இதுபோன்ற பிரச்னைகள் எல்லாம் தீர்க்கப்படும்” என்றார். 

வரவேற்கப்பட வேண்டிய மாற்றம்.

நீதிபதிகள் பற்றிய விவரங்கள் இல்லை! 

நீதித் துறையின் செயல்பாடுகள் மற்றும் ஆவணங்கள் தேசிய நீதித் துறை புள்ளிவிவர அமைப்பு மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் மற்றும் வழக்குகள் குறித்த விவரங்கள் அங்கு பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்த எந்த விவரங்களும் இதுவரை அங்கு சேகரித்து வைக்கப்படவில்லை. ஒரு நீதிபதி பணியாற்றிய ஆண்டுகள் எத்தனை, அவர் கையாண்ட வழக்குகள், அவர் வழங்கிய தீர்ப்புகள், தள்ளுபடி செய்த வழக்குகள், ஒரு வழக்கை நடத்திய விதம், வழக்கை விசாரிக்க எடுத்துக்கொண்ட காலம் என எந்தப் பதிவும் அங்கு இல்லை. நீதிபதிகளுக்கு அடையாள எண் கொடுக்கப்பட்டால், அது நீதிபதிகளின் விவரங்களை மட்டுமல்ல... ஒட்டுமொத்தமாக நீதித்துறையைப் பற்றி எளிமையாகத் தேடித் தெரிந்து கொள்ள உதவும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.