News
Loading...

இடைத்தேர்தல் நடக்கும் மூன்று தொகுதிகளிலும் தேர்தல் நியாயமாக நடைபெறுமா?

இடைத்தேர்தல் நடக்கும் மூன்று தொகுதிகளிலும் தேர்தல் நியாயமாக நடைபெறுமா?

இடைத்தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்குமா என்பது சந்தேகம்தான். சட்டமன்றப் பொதுத்தேர்தல் மே மாதம் நடந்தபோது அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. என்ன காரணம் சொன்னார்கள்? தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.சி.பழனிச்சாமியும், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜியும் ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்கள். பணம் அதிகமாக விளையாடுகிறது என்று சொல்லி தள்ளி வைத்தார்கள். அத்தோடு தேர்தல் கமிஷனின் கடமை முடிந்துவிட்டதா? இரண்டு வேட்பாளர்களும் என்ன தவறு செய்தார்கள் என்பதைக் கண்டுபிடித்து அவர்களை வேட்பாளர்களாக நிற்கவே தகுதி அற்றவர்கள் என்று ஆக்கி இருக்க வேண்டாமா? தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் அந்த இருவரையுமே மறுபடியும் வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளது. என்ன கேலிக்கூத்து இது? மீண்டும் அதே ஆட்கள், அதே தொகுதிகள், அதே கட்சிகள், அதே தேர்தல் கமிஷன்...

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...