News
Loading...

வாழைத்தண்டு சூப்

வாழைத்தண்டு சூப்

தேவையானவை: சின்ன வெங்காயம், தக்காளி – தலா 1, வாழைத்தண்டு – 200 கிராம், பூண்டுப் பல் – 2, உப்பு, மிளகுத் தூள் – தேவையான அளவு, கொத்தமல்லி, புதினா – சிறிதளவு.

செய்முறை: சிறு துண்டுகளாக நறுக்கிய வாழைத்தண்டை தேவையான தண்ணீர் சேர்த்து வேகவைக்க வேண்டும். வெங்காயம், பூண்டு முதலானவற்றையும் பொடிப் பொடியாக நறுக்கி, வாழைத்தண்டுடன் சேர்க்க வேண்டும். நன்றாக வெந்ததும், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து எல்லாவற்றையும் மசித்து, கொத்தமல்லி, புதினா சேர்த்து இறக்கவும். வாழைத்தண்டை அப்படியே சாப்பிட விரும்பாதவர்கள், மசித்து வடிகட்டியும் அருந்தலாம்.

பலன்கள்: சிறுநீரகக் கற்களை நீக்கும். குடல்புண்களுக்குச் சிறந்த மருந்து. உடல் பருமன் உள்ளவர்கள் தினமும் அருந்திவர, விரைவிலேயே நல்ல பலன் தெரியும். பெண்களுக்கு மாதவிடாய்ப் பிரச்னை மற்றும் வெள்ளைப்படுதலைச் சரிசெய்யும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...