News
Loading...

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓட்டளித்தார் ஒபாமா

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓட்டளித்தார் ஒபாமா

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்க உள்ளது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப் களமிறங்குகிறார்.

அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கு, ஒபாமா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வந்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் 50 நாட்களுக்கு முன்னரே ஓட்டளிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதனால் தனது சொந்தமான மாநிலமான சிக்காகோவில் ஹிலாரி கிளிண்டனை ஆதரித்து இரு நிதிதிரட்டும் நிகழ்ச்சிகளில் நேற்று பங்கேற்ற அதிபர் ஒபாமா, இங்குள்ள ஒரு ஓட்டுச்சாவடியில் அதிபர் தேர்தலுக்கான தனது ஓட்டை பதிவு செய்தார்.

ஹிலாரிக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், தான் யாருக்கு ஓட்டளிக்கிறேன் என்பதை யாரும் பார்க்கக் கூடாது என ஒபாமா கேட்டுக் கொண்டார். இதனால் அவர் ஓட்டளித்த பகுதி, தடுப்பு கொண்டு மறைக்கப்பட்டிருந்தது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...