News
Loading...

மக்களாட்சியில் நடக்கும் ஊழலைப் போல மன்னராட்சியிலும் நடந்திருக்கலாம் அல்லவா?

மக்களாட்சியில் நடக்கும் ஊழலைப் போல மன்னராட்சியிலும் நடந்திருக்கலாம் அல்லவா?

மக்களாட்சியில் நடக்கும் ஊழலைப் போல மன்னராட்சியிலும் நடந்திருக்கலாம் அல்லவா?

நிச்சயமாக! அதிகாரமும் பணமும் குவிந்த இடங்களில் ஊழல் இருந்திருக்கும். இன்றைக்கு லஞ்சம், ஊழல், கமிஷன் என்று பல்வேறு சொற்களில் பணமுறைகேடு சொல்லப்படுகிறது. ஒரு காரியத்தைச் செய்வதற்காக, செய்யாமல் இருப்பதற்காகத் தரப்படுவதுதான் லஞ்சம். இது இந்தக் காலத்தில் மட்டுமல்ல, அந்தக் காலத்திலும் இருந்துள்ளது என்பதற்கு உதாரணம்... ‘சாம பேத தான தண்டம்’ ஆகிய நான்கு வகைகளைப் பயன்படுத்தி ஒரு காரியத்தைச் செய்ய வைக்கலாம் என்று சொல்வார்கள்.

சாமம் என்றால் சமாதானம். தானம் என்றால் பொருள் அல்லது காசு கொடுத்தல். பேதம் என்றால் ஒதுக்கி வைத்தல். தண்டம் என்றால் அடித்து உதைத்தல். எனவே, தானம் என்பது மன்னராட்சி காலத்துப் பழக்கம். என்ன... இந்த அளவுக்கு அடித்துப் பறித்திருப்பார்களா என்று தெரியவில்லை!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...