News
Loading...

வார ராசிபலன் - தனுசு

வார ராசிபலன் - தனுசு

14.10.2016 முதல் 20.10.2016 வரை

ஆன்மிக சிந்தனை கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

நிதானமாகச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகளைக் கேட்பீர்கள்.

உத்தியோகம்:   உத்தியோகஸ்தர்களுக்கு, அலுவலகப் பொறுப்புகளில் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் சுமுகமாகப் பழகுவது நன்மையளிக்கும்.

தொழில்:  சொந்தத்தொழில் செய்பவர்கள் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். முக்கியமான சமயத்தில் தொழிற்சாலையில் சிறிய தொல்லைகளை சந்திப்பீர். கூட்டுத் தொழில் செய்பவர்கள், சக கூட்டாளிகளின் சொந்த விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பங்குச்சந்தை வியாபாரம் சுமாராக நடைபெறும்.

கலை :  கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் புதிய வாய்ப்புகளைப் பெற அதிகமான முயற்சிகளை மேற்கொள்ள நேரலாம்.

குடும்பம் : குடும்பத்தில் அவ்வப்போது ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளை  சமாளித்து விடுவீர்கள். சுபகாரியங்கள் தள்ளிப் போக நேரலாம்.

வார வழிபாடு:– வியாழக்கிழமை குருபகவானுக்கு நெய் தீபம்
ஏற்றிவைத்து வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 3,6,9 
அதிர்ஷ்ட நிறம்:– மஞ்சள்

அதிர்ஷ்டக்கிழமை:– வியாழன்

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.