News
Loading...

மீனம் ராசி நேயர்களுக்கான அக்டோபர் மாத ராசிபலன்

மீனம் ராசி நேயர்களுக்கான அக்டோபர் மாத ராசிபலன்

1-10-2016 முதல் 31-10-2016 வரை

கணித்தவர் : நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

மீனம்: (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை).

பொது: செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக உள்ளது. 3-ஆம் தேதி முதல் புதன் 7-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 13-ஆம் தேதி முதல் சுக்கிரன் 9-ஆமிடம் மாறுவது நல்லது. 17-ஆம் தேதி முதல் சூரியன் 8-ஆமிடம் மாறுவது குறை ஆகும். 21-ஆம் தேதி முதல் புதன் 8-ஆமிடம் மாறுவது நல்லது. சூரிய நமஸ்காரம் செய்யவும். ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்யலாம் அல்லது கேட்கலாம்.

ஆரோக்கியம், குடும்பம்: முதுகு, மறைமுக உறுப்புக்கள் சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டாலும் குரு பலத்தால் சரியாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். கூட்டாளிகள் உதவுவார்கள். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி இடையே சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். தந்தை நலனில் அக்கறை தேவைப்படும்.

பொருளாதார நிலை: பண நடமாட்டம் திருப்தி தரும். கொடுக்கல்-வாங்கலில் வளர்ச்சி காணலாம். 

நிலபுலங்கள்: புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருவாய் கிடைக்கும்.

தொழில்: உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள், கலைஞர்கள், இயந்திரப்பணியாளர்கள் ஆகியோருக்கெல்லாம் செழிப்புக் கூடும். மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் புகழோடு பொருளும் பெறுவார்கள். சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை பல ஆற்றுவார்கள். அரசியல்வாதிகளும் அரசுப்பணியாளர்களும் பொறுப்புடன் தங்கள் கடமைகளை ஆற்றிவருவது நல்லது.

மாதர்களுக்கு: அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். புதிய பொருட்கள் சேரும். மன உற்சாகம் பெருகும்.

மாணவர்களுக்கு: வெற்றி வாய்ப்புக்கள் கூடும். விளையாட்டு, போட்டிகள், பந்தயங்கள் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பரிசுகளும் விருதுகளும் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: அக்டோபர் 2, 3, 4, 29 (இரவு), 30, 31. 

அதிர்ஷ்ட தேதிகள்: அக்டோபர் 5, 6 (முற்பகல்), 11, 16, 19, 28.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.