News
Loading...

கடக ராசி நேயர்களுக்கான அக்டோபர் மாத ராசிபலன்

கடக ராசி நேயர்களுக்கான அக்டோபர் மாத ராசிபலன்

1-10-2016 முதல் 31-10-2016 வரை

கணித்தவர் : நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

கடகம்: (புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் வரை)

பொது: சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் சாதகமாக உள்ளது. 3-ஆம் தேதி முதல் புதன் 3-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 13-ஆம் தேதி முதல் சுக்கிரன் 5-ஆமிடம் மாறுவது நல்லது. 17-ஆம் தேதி முதல் சூரியன் 4-ஆமிடம் மாறுவது குறை. 21-ஆம் தேதி முதல் புதன் 4-ஆமிடம் மாறுவது நல்லது. நாகரை வழிபடவும். குரு வழிபாடு அவசியமாகும்.

ஆரோக்கியம், குடும்பம்: மார்பு, நுரையீரல், காது சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் ஏதேனும் சலனம் உண்டாகும். அந்நியர்களிடம் எச்சரிக்கை தேவை. வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும். தந்தையால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். மக்கள் நலனில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள்.

பொருளாதார நிலை: சாதாரணமாகவே காணப்படும். கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம். புதிய துறைகளில் அதிகம் முதலீடு செய்யலாகாது.

நிலபுலங்கள்: லாபம் தரும். புதிய சொத்துக்கள் சேரும். பழைய சொத்துக்களைப் புதுப்பித்துக் கொள்ள வாய்ப்புக் கூடிவரும்.

தொழில்: அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை கூடும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். சட்டம், காவல், ராணுவம், மின்சாரம், கட்டடத் தொழில் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பிரச்னைகள் சூழும்.

மாதர்களுக்கு: மனத்துக்கினிய சம்பவங்கள் நிகழும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு: அளவோடு நலம் உண்டாகும். விளையாட்டு விநோதங்களில் வெற்றி கிட்டும்.

சந்திராஷ்டமம்: அக்டோபர் 12, 13, 14 (முற்பகல்). 

அதிர்ஷ்ட தேதிகள்: அக்டோபர் 2, 3, 5, 6 (முற்பகல்), 11, 16, 19, 28, 30

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.