News
Loading...

கும்பம் ராசி நேயர்களுக்கான அக்டோபர் மாத ராசிபலன்

கும்பம் ராசி நேயர்களுக்கான அக்டோபர் மாத ராசிபலன்

1-10-2016 முதல் 31-10-2016 வரை

கணித்தவர் : நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

கும்பம்: (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் வரை)

பொது: செவ்வாய், சுக்கிரன், சனி ஆகியோர் சாதகமாக உலவுகிறார்கள். 3-ஆம் தேதி முதல் புதன் 8-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். 13-ஆம் தேதி முதல் சுக்கிரன் 10-ஆமிடம் மாறுவது கோசாரப்படி சிறப்பாகாது என்றாலும் நலம் புரிவார். 17-ஆம் தேதி முதல் சூரியன் 9-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 21-ஆம் தேதி முதல் புதன் 9-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகாது. குரு, ராகு, கேது ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்துவருவது நல்லது.

ஆரோக்கியம், குடும்பம்: உஷ்ணாதிக்கம் கூடும். தலைவலி, ஜுரம் மற்றும் கண் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். குடும்ப நலம் கவனிப்பின்பேரில் சீராகும். உடன்பிறந்தவர்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் அளவோடு நலம் ஏற்படும். தந்தை நலனிலும் மக்கள் நலனிலும் கவனம் தேவை.

பொருளாதார நிலை: சாதாரணமாகவே காணப்படும். கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை.
நிலபுலங்கள்: சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். வீடு கட்டுவதற்கான வாய்ப்புக் கூடிவரும். வாகன யோகம் உண்டாகும்.

தொழில்: கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். இயந்திரப்பணியாளர்கள் லாபம் கூடப் பெறுவார்கள். செந்நிறப் பொருட்கள் ஆதாயம் தரும். திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், மருத்துவர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.

மாதர்களுக்கு: நற்கார்யங்களில் ஈடுபாடு கூடும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும்.

மாணவர்களுக்கு: 3-ஆம் தேதி முதல் அனுகூலமான சூழ்நிலை உருவாகும். விளையாட்டு, போட்டிகளில் வெற்றிகிடைக்கும்.

சந்திராஷ்டமம்: அக்டோபர் 1, 2 (பகல்), 27, 28, 29 (பகல்).

அதிர்ஷ்ட தேதிகள்: அக்டோபர் 2 (இரவு), 3, 5, 6 (முற்பகல்), 11, 16, 19, 30

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.