News
Loading...

பள்ளி, கல்லூரிகளில் கேமரா பொருத்த கோரிக்கை

பள்ளி, கல்லூரிகளில் கேமரா பொருத்த கோரிக்கை

அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவி குற்றங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் கலைச் செல்வி , தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: 

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் மாணவ மாணவியருக்கு எதிரான வன் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. மாணவியர் பலர் பாலியல் தொல்லையில் பாதிக்கப்படுவதும், மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்வது, பள்ளியில்  இருந்து காணாமல் போவது போன்ற அவலங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மா ணவியரை கழிப்பிடத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபடுத்தியது, துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தியது பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த பணி செய்ய மறுப்போரை மிரட்டுவது, தண்டிப்பது போன்ற கொடுமைகள் நடந்துள்ளன. இது தொடர்பாக பெற்றோர் புகார் கொடுத்தும் பயன் இல்லை. கடந்த ஆண்டு அனைத்து பள்ளி கல்லூரிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று கேட்டோம். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அனைத்து பள்ளி கல்லூரிகளில் கேமராக்கள் பொருத்த வேண்டும். இவ்வாறு கலைச் செல்வி தனது மனுவில் கூறியுள்ளார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...