News
Loading...

வார ராசிபலன் - ரிஷபம்

வார ராசிபலன் - ரிஷபம்

14.10.2016 முதல் 20.10.2016 வரை

நுண்ணறிவு, செயல்திறன் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!

வழக்குகளில் திருப்பங்களைக் காணமுடியும். மனதில் நிம்மதியும், உற்சாகமும் குடி கொள்ளும்.

உத்தியோகம்:  உத்தியோகஸ்தர்கள், பொறுப்புகளில் கவனமாக இல்லாவிட்டால் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். கொடுக்கல்–வாங்கலில் நிதானமாக இருக்க வேண்டும். வீண் பேச்சுகளைத் தவிர்ப்பது அவசியம்.

தொழில்:  சொந்தமாகத் தொழில் செய்பவர்கள் வியாபாரத்தில் ஏற்றம் காண்பர். கூட்டுத்தொழிலில் உள்ளவர்கள் கூட்டாளிகளின் ஆலோசனையைக் கேட்டு செயல்களில் இறங்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். பங்குச்சந்தை வியா   பாரிகள் லாபம் பெற வாய்ப்பு உண்டு.

கலை :  கலைத்துறையினர், நீர்நிலைகளில் பணிசெய்யும் போது கவனமாக இருப்பது அவசியம். புதிய வாய்ப்புகளில் பரபரப்பாகச் செயல்படுவர்.

குடும்பம் :    குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள், உருவாகலாம். குடும்பத்தோடு ஆலய தரிசனத்திற்காக வெளியூர் செல்ல திட்டமிடுவீர்கள்.

வார வழிபாடு:– புதன்கிழமை பெருமாள் சன்னிதியில் நெய் விளக்கிட்டு வழிபாடு செய்தால் நல்ல பலன்கள் நடைபெறும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 1,5,9 

அதிர்ஷ்ட நிறம்:– பச்சை

அதிர்ஷ்டக்கிழமை:– புதன்

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.